என்னுடைய சொத்துக்கள் இந்த 3 பேருக்குத்தான்..! உயில் எழுதி வைத்துள்ள நித்தியானந்தா.

 

குழந்தைக் கடத்தல், பாலியல் புகார் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வரும் நித்தியானந்தா, தினமும் சத்சங்கம் மூலம், பக்தர்களுக்கு ஆன்மீக சொற்பொழிவு ஆற்றி வருகிறார். அவர் எங்கிருக்கிறார் என்பதை கண்டுபிடிக்க முடியாமல் மத்திய புலனாய்வு அமைப்புகள் திணறி வருகின்றன.

தனது சொத்துக்கள் 3 பேருக்கு மட்டுமே சொந்தம் என்று புதிய வீடியோவில் தெரிவித்துள்ள நித்யானந்தார், அந்த 3 பேரின் விவரங்களையும் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசு சார்பில், “நித்தியானந்தா தலைமறைவாக இருக்கிறார்” என்று சொல்லப்பட்டாலும், தினம் ஒரு வீடியோவை ரிலீஸ் செய்து வருகிறார் அவர். அதில் தன்னைத் தேடுபவர்கள் பற்றியும், தன் மீதான குற்றச்சாட்டுகள் பற்றியும் கேலி செய்கிறார். தொடர்ந்து, ‘ஆன்மிக சொற்பொழிவுகளை' ஆற்றி வருகிறார்.

இந்த நிலையில் புதிதாக வெளியிட்டுள்ள வீடியோவில் நித்யானந்தா தனது சொத்துக்கள் குறித்த விவரத்தை வெளியிட்டுள்ளார். நான் நீண்ட நாளுக்கு உயிரோடு இருப்பேன். என்றைக்கு உடலை விட்டு உயிர் பிரிகிறதோ, அப்போது எனது உடல் பெங்களூருவில் உள்ள ஆசிரமத்தில், சமாதி செய்விக்கப்பட வேண்டும். மதுரை ஆதீன சன்னிதானங்கள் எந்த முறைப்படி சமாதி செய்விக்கப்படுவார்களோ, அதே முறையில் எனக்கும் செய்விக்கப்பட வேண்டும். என்னுடைய உடல் இந்த முறைப்படிதான் ஜீவ சமாதி செய்யப்பட வேண்டும் என்று உயிலில் எழுதியுள்ளேன். மக்கள் எனக்கு கொடுத்த நன்கொடை, அன்பளிப்பு உள்ளிட்ட அனைத்து சொத்துக்களும், திருவண்ணாமலை குரு பரம்பரை, மதுரை குரு பரம்பரை, காஞ்சி குரு பரம்பரை ஆகிய 3 பேருக்கு மட்டுமே சொந்தம் என்று உயிலில் எழுதி வைத்து விட்டேன்.இவ்வாறு நித்யானந்தா தனது புதிய வீடியோவில் தெரிவித்துள்ளார்.

More News

"முதலில் நான் இந்தியன்.. மாணவர்களுக்காக கவலைப்பட வேண்டியது நம் கடமை" - இர்ஃபான் பதான்.

``அரசியல் பழி சொல்லும் விளையாட்டு தொடரட்டும். ஆனால், நானும் என்னுடைய நாடும் ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் குறித்தும் அவர்களின் போராட்டம் குறித்தும் கவலைப்படுகிறோம்”

"வெள்ளையர்கள் என்ன செய்தார்களோ அதையே இந்த அரசும் செய்கிறது" - வரலாற்று ஆய்வாளர் ராமச்சந்திர குஹா

குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிராக பல இடங்களில் போராட்டம் நடைபெற்று வரும் வேளையில் பெங்களூரில் வரலாற்று ஆய்வார் ராமச்சந்திர குகா மற்றும் பலர் போராடியதற்காக கைது செய்யப்பட்டனர்

ஃபோர்ப்ஸ் பட்டியலில் இடம்பிடித்த கணவன் - மனைவி நட்சத்திரங்கள்

ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவின் புகழ்பெற்ற நட்சத்திரங்கள் குறித்த பட்டியல் ஒன்றை போர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டு வருவது தெரிந்தது. அந்த வகையில்

"மோடியை கீழே விழ வச்ச படியை இடிக்கிறோம்" - உ.பி அரசு.

நமாமி கங்கா திட்ட கூட்டத்திற்காக பிரதமர் மோடி உத்திர பிரதேசம் சென்றிந்தார் அப்போது படியேறும் போது தடுக்கி விழுந்தார்

17 வயது இளம்பெண்ணை விரும்பிய இருவர்: கொலையில் முடிந்த காதல்!

aவேலூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது இளம்பெண் ஒருவரை ஒரே நேரத்தில் இரண்டு பேர் காதலித்ததாகவும் இருவரும் தங்களை தன்னைத்தான் திருமணம் செய்ய வேண்டும்