சொந்தத்தீவு, இனி தனி நாடு. 6 டன் தங்க நகைகளோடு செட்டில் ஆன நித்தியானந்தா..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நித்தியானந்தாவின் செயலாளராக இருந்த ஜனார்த்தன சர்மா, என் இரண்டு மகள்களை, நித்தியானந்தா கடத்திச் சென்றுவிட்டார். அவர்களை மீட்டுத் தர வேண்டும் என்று குஜராத் மாநில காவல்துறையில் சென்ற மாதம் புகார் அளித்தார். புகாரை விசாரிக்க காவல்துறை சென்றபோது நித்தியானந்தா இந்தியாவில் இல்லை என்ற தகவல் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து நித்தியானந்தாவை இன்டர்போல் உதவியுடன் கைது செய்து விசாரிக்குமாறு குஜராத் நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவிட்டது.
விசாரணையை தொடங்கிய காவல்துறைக்கு சொந்த தீவு, தனி நாடு என பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன.தென் அமெரிக்கக் கண்டத்தில் உள்ள
ஈக்குவடார் நாட்டுக்குச் சொந்தமான ஒரு தீவை வாங்க, பல ஆண்டுகளுக்கு முன்பே அமெரிக்க பக்தர்கள் மூலம் வேலையை ஆரம்பித்துள்ளார் நித்தியானந்தா. ஒருவழியாக இரு ஆண்டுகளுக்கு முன்பே பல கோடி ரூபாய் மதிப்பில் தீவு வாங்கிவிட்டார்கள். அந்தத் தீவில் குடியேற, சத்தமில்லாமல் வியூகம் வகுக்கப்பட்டுள்ளது. முதலில், பிடதியிலிருந்து ஆன்மிகப் பயணம் என்று கிளம்பி, உத்தரப்பிரதேசத்தில் சில நாள்கள் தங்கியுள்ளார் நித்தியானந்தா. அங்கு இருந்து தரைவழி மார்க்கமாக நேபாளம் சென்றுள்ளார்.இந்து நாடான நோபாளத்தில் அரசு அதிகாரிகள் நித்தியானந்தாவை இந்து மதத் தலைவராகக் கருதி, ராஜமரியாதையுடன் அவரை காட்மாண்ட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். காட்மாண்ட் விமானநிலையத்திலிருந்து தனி விமானம்மூலம் ஈக்குவடார் அருகே உள்ள தன் தீவுக்குச் சென்றிருக்கிறார் நித்தியானந்தா. அவருடன் இரண்டு பெண் சீடர்களும், ஜனார்த்தன சர்மாவின் மூத்த மகளும் உடன் சென்றுள்ளனர். அதற்குப் பிறகு மேலும் சிலர் அந்தத் தீவுக்குச் சென்று ஐக்கியமாகியுள்ளனர். இந்தியாவிலிருந்து மொத்தம் 27 பேர் கிளம்பி, அந்தத் தீவில் தஞ்சமடைந்துள்ளனர். அதில் பெரும்பாலானோர் பெண்கள்.
கர்நாடகா ஆசிரமத்தில் விசாரித்த பொது அவரது பக்தர்கள் பலர் பருவமடையாத பெண் குழந்தை களுக்கு, பாலியல் தொந்தரவு கொடுத்தார் நித்தியானந்தா. இரவு நேரங்களில் பெண் குழந்தைகளை தனது அறைக்கு வரவழைத்து, தீட்சை என்ற பெயரில் குழந்தைகளை வக்கிரமான பாலியல் தொந்தரவுகளுக்கு ஆளாக்கியுள்ளார் என்று கூறியிருக்கிறார்கள். இதற்கான ஆதாரங்களை தற்போது அதிகாரிகள் திரட்டிவருகிறார்கள். இதனால் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைச் சட்டமும் நித்தியானந்தா மீது பாயக்கூடும்.
ஒரு நாட்டை உருவாக்கக் கூடிய அளவிற்கு பணம் எப்படி கிடைத்தது என்று யோசிக்கும் போது, ஆசிரமத்தின் துலாபாரம் நிகழ்வு பற்றி தெரிய வந்துள்ளது. நித்தியானந்தாவின் பிடதி ஆசிரமத்தில் துலாபாரம் நிகழ்ச்சி என ஒன்று ஆண்டுக்கு நான்கு முறை நடக்குமாம். அப்போது நித்தியானந்தாவின்
எடைக்கு நிகரான தங்கத்தை பக்தர்கள் வழங்குவர். இதுவரை அப்படிப் பெறப்பட்ட நகைகளின் எடை மட்டுமே ஆறு டன் எனக் கூறப்படுகிறது. அவற்றில் பெரும்பகுதி இப்போது நித்தியானந்தாவின் தீவுப் பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டுவிட்டது.
தனித்தீவை சொந்தமாக வாங்கினாலும் அந்தத் தீவு மற்றொரு நாட்டின் கட்டுப்பாட்டில் தான் தற்போதுவரை இருக்கிறது. அந்தத் தீவை தனிநாடாக
மாற்றும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் நித்தியானந்தா. இந்தத் தகவல்தான் மத்திய அரசை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. நித்தியானந்தா தரப்பிலிருந்து ஈக்குவடார் நாட்டின் அரசு உயர் அதிகாரிகளுக்கு இதுகுறித்து தகவல் அனுப்பப்பட்டுள்ளது. தங்களது தீவை தனிப்பிரதேசமாக அறிவிக்க அனுமதி வேண்டும் என்று நித்தியானந்தா தரப்பில் கேட்கப்பட்டுள்ளது. ஓர் இடத்தை தனிநாடாக அறிவிக்க, ஐக்கிய நாடுகள் சபையின் ஒப்புதல் அவசியம். அதேபோல் புதிதாக ஒரு நாட்டை ஐக்கிய நாடுகள் சபை அங்கீகரிக்க வேண்டுமென்றால், அதற்கும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான உலக நாடுகள் ஒப்புதல் அளிக்க
வேண்டும். அதற்கான வேலையை சில மாதங்களுக்கு முன்பே நித்தியானந்தா தரப்பு ஆரம்பித்துள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aarna Janani
Contact at support@indiaglitz.com
Comments