ஏழுமலையான் அவதாரத்தில் நித்யானந்தா: எல்லை மீறி செல்லும் சேட்டை!
Send us your feedback to audioarticles@vaarta.com
பாலியல் வன்முறை வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள நித்தியானந்தா திடீரென இந்தியாவை விட்டு வெளியேறி ’கைலாசம்’ என்ற புதிய நாட்டை உருவாக்கி இருப்பதாகவும் தனது நாட்டிற்கு வருகை தரும் மக்களுக்கு தொழில் தொடங்குவது உள்பட பல்வேறு சலுகைகள் தருவதாகவும் அவர் அவ்வப்போது வீடியோக்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். அவருடைய ஒவ்வொரு சீரியஸான அறிவிப்பையும் பொதுமக்கள் காமெடியாக ரசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஏற்கனவே தன்னைத்தானே கடவுள் என்றும், தான் சிவனின் அவதாரம் என்றும் கூறிக்கொள்ளும் நித்தியானந்தா தற்போது தனது பேஸ்புக்கில் திருப்பதி ஏழுமலையான் போல் காட்சி அளிக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மேலும் அவர் பக்தர்களுக்கு ஆசீர்வாதங்களை வழங்குவது போன்றும், தன்னை வணங்கினால் நிதி நெருக்கடியில் இருந்து வெளியே வந்து ஏராளமான செல்வங்கள் பெருகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படம் உண்மையான ஏழுமலையான் பக்தர்களை சங்கடப்படுத்தி உள்ளது.
இந்திய அரசால் தேடப்படும் ஒருவர் தன்னைத் தானே கடவுள் என்று கூறிக் கொண்டிருக்கும் நிலையில் அவர் இந்திய அரசால் பிடிபட்ட பிறகு உண்மையிலே அவர் கடவுளா? அல்லது கைதியா? என தெரிய வரும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com