நானே ஒரு பொறம்போக்கு..பரதேசி.. என்னையெல்லாம் ஒன்னுமே செய்ய முடியாது..நேற்று வெளிவந்த வீடியோவில், நித்தியானந்தா.
Send us your feedback to audioarticles@vaarta.com
தான் எங்கிருந்தாலும் இந்தியாவில் தனது ஆசிரமங்கள் தடையின்றி செயல்படும் என்றும் மதுரை மற்றும் திருவனந்தபுரத்தில் உள்ள தனது ஆஸ்ரமத்திற்கு பிரியானந்தா என்ற பெண்ணை ஆதீனமாக்கி இருப்பதாகவும் தெரிவித்துள்ள நித்தி, தன்னை ஒரு பொறம்போக்கு என்று அறிவித்துக்கொண்டார்.
பாலியல் பலாத்காரம், சிறுமிகள் கடத்தல், ஆசிரமத்தில் அத்துமீறல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் குஜராத் காவல்துறையினரால் தேடப்படும் நித்தியானந்தா மத்திய மாநில அரசுகளுக்கு கண்ணாமூச்சி ஆட்டம் காட்டி வருகிறார்.பாஸ்போர்ட்டு காலாவதியாகி விட்டதால் நித்தி, இந்தியாவில் இருந்து வெளி நாடு தப்பிச் செல்ல முடியாது என்று இந்திய வெளியுறவுத்துறையினர் நம்பி இருக்க, இவர் பெரிய டேஞ்சரெஸ் பெல்லோ.. இவரையெல்லாம் நீங்க பிடிக்க முடியாது என்று வடிவேலு ஸ்டைலில் கூறிக்கொண்டு பாஸ்போர்ட் இல்லாமலே எளிதாக வெளிநாடு தப்பிச் சென்று மத்திய அரசுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.
அதோடில்லாமல் தென் அமெரிக்காவின் இக்வட்டார் நாட்டில் உள்ள தனது தனி தீவிற்கு கைலாசா என்று பேயர் வைத்து தனி நாடாக அறிவிக்க உள்ளார். அதற்காக பக்கதர்களிடையே தனி வசூல் வேட்டையும் நடை பெற்று வருகின்றது.
நித்தியின் அகமதாபாத் ஆசிரமம் இழுத்து பூட்டி சீல்வைக்கப்பட்டுள்ள நிலையில், பெங்களூரு ஆசிரமத்திலும் அதிகாரிகள் சோதனை நடத்தி பல முக்கிய ஆவணங்களை கைப்பற்றி சென்றுள்ளனர்.இந்த நிலையில் வழக்கம் போல தனது தீவில் இருந்து கொண்டு சத்சங் என்ற பெயரில் வீடியோ வெளியிட்ட நித்தி, தான் ஒரு பொறம்போக்கு என்பதால் தன்னை ஒன்றும் செய்து விட முடியாது என்று சவால் விடுத்துள்ளார்.தான் தொலைவில் இருந்தாலும் மதுரை மற்றும் திருவணந்தபுரத்தில் உள்ள ஆசிரமம் சிறப்பாக செயல்படுவதாகவும் திருவணந்தபுரம் நித்தியானந்தா பீடத்தின் ஆதினமாக ருத்திரகன்னியான பக்தி பிரியானந்தாவை நியமித்து இருப்பதாக தெரிவித்த நித்தி, தான் மான அவமானத்திற்கு கவலைபடுவதில்லை என்றார்.
எல்லாவற்றுக்கும் மேலாக மனுஷங்க ஜாலியாவும் இருக்க மாட்டானுங்க இருக்கிறவனையும் வீட்டா மாட்டனுங்க..என்று கூறிய நித்தியானந்தா சிங்கிளாக வசிப்பவர்கள் இதனை செய்யக்கூடாது என்று சித்தர் பாட்டு ஒன்றையும் சுட்டிக்காட்டி புத்தி சொன்னார்.லலித்மோடி, விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெகுல் ஜோக்சி எல்லாம் ஆயிரகணக்கா கோடிகளுடன் வெளிநாடுகளுக்கு தப்பிச்சென்ற கேடிகள் என்றால், கோடிகளுடன் சிஷ்ய லேடிகளையும் அழைத்துக் கொண்டு தனி தீவில் பதுங்கி இருந்து தனி நாடு, பாஸ்போர்ட் என்று கதை அளக்கும் நித்தியானந்தாவை பக்கா கேடி என்கின்றனர் காவல்துறையினர்.நித்தியையாவது இந்தியாவிற்கு கைது செய்து அழைத்து வருவார்களா? என்பதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aarna Janani
Contact at support@indiaglitz.com