பாதம் தொட்டு வணங்கினால் மட்டுமே குடியுரிமை: சீமானுக்கு நித்தி நிபந்தனை?
Send us your feedback to audioarticles@vaarta.com
குடியுரிமை சீர்திருத்த சட்டத்தால் எங்களுக்கு குடியுரிமை பறிபோனால் எந்த பிரச்சினையும் இல்லை என்றும் எங்கள் தலைவர் நித்தியானந்தா கைலாஷ் என்ற தனி நாட்டை உருவாக்கி இருக்கிறார் என்றும் நாங்கள் எல்லோரும் அங்கு சென்று விடுவோம் என்றும் சமீபத்தில் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நடைபெற்ற கூட்டம் ஒன்றில் நாம் தமிழர் கட்சியின் சீமான் பேசி இருந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் சீமானின் இந்த பேச்சுக்கு கைலாஷ் நாட்டின் பிரதமர் அலுவலகம் என்று கூறப்படும் ட்விட்டர் பக்கத்தில் அவருக்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது. அதில் ஸ்ரீ கைலாஷ் ஒன்றும் திறந்த மடம் அல்ல என்றும், தமிழ் பிரிவினைவாதிகளை அனுமதிக்க என்று கூறியதோடு, கைலாஷ் நாட்டில் சீமான் குடியுரிமை பெற்று தங்க வேண்டுமானால் அவருக்கு ஒரு நிபந்தனை விதிக்கப்படும் என்றும் சீமான் அரசியல் விட்டு விலகி மீனாட்சியின் பாதத்தை வணங்க வேண்டும் என்றும் இந்த நிபந்தனையை ஏற்றால் மட்டுமே சீமானுக்கு குடியுரிமை வழங்கப்படும் என்றும் நித்தியானந்தா குறிப்பிட்டுள்ளதாக அந்த டுவிட்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கைலாஷ் என்ற நாடே கற்பனையான நாடு என்று கூறப்பட்டு வரும் நிலையில் அந்த கைலாஷ் நாட்டின் பிரதமர் அலுவலகம் என்ற பெயரில் உருவாகியிருக்கும் இந்த டுவிட்டர் பக்கம் எந்த அளவுக்கு நம்பகத்தன்மை உள்ளது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
இந்த நிலையில் அதே கூட்டத்தில் பேசிய சீமான் தனக்கு வாக்கு அளிக்காவிட்டால் மலையடிவாரம் ஒன்றில் ஒரு ஆசிரமத்தை அமைத்து சீமானந்தா என்ற ஆசிரமத்தை உருவாக்க இருப்பதாகவும் அவர் நகைச்சுவையுடன் கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com