அட லூசுங்களா! நித்தியானந்தாவின் வேற லெவல் காமெடி: வைரலாகும் வீடியோ

பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகி இந்திய அரசால் தேடப்பட்டு கொண்டிருக்கும் நித்தியானந்தா, அவ்வப்போது சமூக வலைதளங்களில் வீடியோக்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துவார் என்பது தெரிந்ததே. குறிப்பாக சமீபத்தில் கைலாசம் என்ற நாட்டை உருவாக்கி இருப்பதாகவும் அந்த நாட்டிற்காக புதிய கரன்சியை உருவாக்கி இருப்பதாகவும் கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்

இந்த நிலையில் சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள ஒரு வீடியோ ஒன்றில், ‘தன்னை கைலாசா நாட்டின் அதிபர் என்றும் பிரதமர் என்று யாரும் கூற வேண்டாம் என்றும், தான் அதற்கும் மேலானவர் என்றும், கடவுள் என்றும் கூறியுள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியபோது ’அட லூசுகளா! என்னை அதிபர் என்றும் கடவுள் என்று கூறாதீங்கடா. அதிபர் என்றும் பிரதமர் என்று கூறி ஏன் இப்படி வயிறு எரிந்து சாகிறீர்கள். நான் அதுக்கெல்லாம் மேல..டா.. நான் கடவுள்டா... என்னை கடவுள் என்று கூப்பிடுங்கடா... என்று கூறியுள்ளார்

மேலும் ’நான் என்னை மட்டும் கடவுள் என்று கூறவில்லை உங்களையும் சேர்த்து தான் கடவுள் என்று கூறுகிறேன். எந்த ஒரு மதத்தில் உள்ள ஒருவன், தன்னைக் கடவுள் என்று உணர்ந்து கொண்டு மற்றவர்களையும் கடவுளாக பார்க்கின்றானோ, அந்த மதம் மட்டுமே இனிமேல் உலகத்தில் நீடித்து இருக்கும் அந்த வகையில் நான் என்னை கடவுள் என்று உணர்ந்து கொண்டேன், உங்களையும் சேர்த்து தான் நான் கடவுள் என்று கூறுகிறேன். அதுக்கு முதல்ல பதில் சொல்லுங்கடா’ என்று நித்தியானந்தா வெளியிட்ட வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்

இந்த காமெடி வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

 

More News

ஒரே ஒரு எலியால் ஒரு கோடி ரூபாய் சேதம்: சிசிடிவியில் அதிர்ச்சி காட்சிகள்

ஒரே ஒரு எலியால் கார் சர்வீஸ் செய்யும் நிறுவனம் ஒன்றுக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

எஸ்பிபிக்காக கூட்டுப்பிரார்த்தனை: மெழுகுவர்த்தி ஏந்தி ரசிகர்கள் பிரார்த்தனை

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர் நலமுடன் குணமாகி வீடு திரும்ப வேண்டும்

இதை உங்களால் மட்டுமே செய்ய முடியும் சார்: எஸ்பிபி வீடியோவை வெளியிட்ட சிவகார்த்திகேயன்

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கள்ளக்காதலில் மனைவி ஓட்டம், கள்ளக்காதலனின் மாமனாரை கொலை செய்த கணவர்: சென்னையில் பரபரப்பு

சென்னையில் வாலிபர் ஒருவரின் மனைவி கள்ளக்காதலனுடன் ஓடிவிட்டதால், அந்த ஆத்திரத்தில் கள்ளக்காதலனின் மாமனாரை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

கடவுளுக்கும் மனசாட்சி இருக்கு: எஸ்பிபி சரண் உருக்கம்

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வருகிறார்.