'ரிசர்வ் பேங்க் ஆஃப் கைலாசா' தொடக்கம்: நித்தியானந்தா அதிரடி
Send us your feedback to audioarticles@vaarta.com
பாலியல் வழக்கு ஒன்றில் சிக்கி இந்திய போலீசாரால் தேடப்பட்டு வரும் நித்தியானந்தா தற்போது தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திடீரென கைலாசா என்ற நாட்டை தான் உருவாக்கி இருப்பதாகவும் இந்த நாட்டிற்கு தானே அதிபர் என்றும், இந்த நாட்டிற்கான அனுமதி கிடைக்க ஐநாவிடம் விண்ணப்பம் செய்து இருப்பதாகவும் கூறியிருந்தார். அவ்வப்போது தனது கைலாச நாடு குறித்து அதிரடியான அறிவிப்புகளை தலைமறைவாக இருக்கும் நித்தியானந்தா அறிவித்து வரும் நிலையில் தற்போது தனது நாட்டிற்கு வாடிகான் வங்கிக்கு இணையாக ரிசர்வ் பேங்க் ஆஃப் கைலாசா என்ற வங்கியை உருவாக்கியிருப்பதாக நித்யானந்தா கூறியிருக்கிறார்.
இது குறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது: விநாயகர் சதுர்த்தி அன்று கைலாச நாடு குறித்த முக்கிய அறிவிப்புகளை வெளியிட இருக்கிறேன். நிறைய நன்கொடைகள் கிடைத்திருப்பதால் நல்ல காரியங்களுக்கு செலவிட வங்கி தொடங்கி உள்ளேன்.
வாடிகன் வங்கியை முன் மாதிரியாக வைத்து ரிசர்வ் பேங்க் ஆஃப் கைலாசா உருவாக்கப்பட்டுள்ளது. 300 பக்க பொருளாதாரக் கொள்கையும் தயாராக உள்ளது. கைலாசா நாட்டிற்கான பணம் அடிக்கப்பட்டுவிட்டது. விரைவில் அது குறித்த அறிவிப்பை வெளியிடுகிறேன். உள்நாட்டிற்கு ஒரு கரன்ஸி வெளிநாட்டு பரிவர்த்தனைக்கு ஒரு கரன்சியும் அச்சடிக்க தயாராகிவிட்டது. ரிசர்வ் வங்கி ஆப் கைலாசா சட்டத்தின் படியே தொடங்கப்பட்டுள்ளது சட்டத்திற்கு புறம்பாக எதுவும் இருக்காது என்று அவர் கூறியுள்ளார். நித்யானந்தாவின் இந்த அதிரடி அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com