பாலாஜிக்கு நித்யா எழுதிய அதிர்ச்சி கடிதம்
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் வீட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் அவர்களுடைய வீட்டில் இருந்து ஒரு பரிசும் கடிதமும் வந்து கொண்டிருக்கும் நிலையில் நேற்று ஜனனி, ரித்விகா, ஐஸ்வர்யா உள்பட ஒருசிலரின் கடிதங்களும், பரிசுகளும் வந்தன
இந்த நிலையில் சற்றுமுன் வெளியான புரமோ வீடியோவில் பாலாஜிக்கு அவருடைய மனைவி நித்யா எழுதிய கடிதம் வந்துள்ளது. அந்த கடிதத்தில் 'பாலாஜி நீங்கள் இந்த போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகிறேன். தயவுசெய்து யாரை பற்றியும் அவர்கள் இல்லாத போது பேச வேண்டாம். ஒரு நண்பனாக, நண்பனாக மட்டும் உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் எப்போதும் உண்டு' என்று எழுதியுள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரிந்த குடும்பத்துடன் மீண்டும் சேரலாம் என்ற எண்ணம் பாலாஜிக்கு அதிகம் இருக்கும் நிலையில் 'ஒரு நண்பனாக மட்டும்' என்ற வார்த்தை பாலாஜிக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.
இந்த கடிதத்தை பார்த்து பாலாஜி கண்ணீர் விடுவதோடு இந்த புரமோ வீடியோ முடிந்துள்ளது. பாலாஜி டைட்டில் வின்னராக மாறினால் ஒருவேளை நித்யா மனம் மாறுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
???? #பிக்பாஸ் - தினமும் இரவு 9 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil #VivoBiggBoss @Vivo_India pic.twitter.com/lCRrMMFNcF
— Vijay Television (@vijaytelevision) August 28, 2018
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments