மும்தாஜின் ஆயுதம் என்று நித்யா கூறியது என்ன? சரியாக கணித்த ரித்விகா
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த வாரம் பிக்பாஸ் விட்டில் உள்ள போட்டியாளர்களின் உறவினர்கள் வருகை போட்டியாளர்களுக்கு பெரும் ஆறுதலாக இருந்தது. பார்வையாளர்களுக்கும் ஒரு வாரமாவது பிக்பாஸ் வீட்டில் சண்டை இல்லாமல் இருந்ததால் திருப்தியாக இருந்தது.
இந்த நிலையில் பாலாஜியின் மனைவி நித்யா பிக்பாஸ் வீட்டிற்குள் தனது மகளுடன் வந்தபோது அனைவருக்கும் நல்ல அறிவுரைகளை கூறினார். குறிப்பாக மும்தாஜிடம் நீங்கள் மற்றவர்களின் வீக்னெஸ்ஸை ஆயுதமாக பயன்படுத்துகிறீர்கள், அதை மட்டும் கொஞ்சம் மாற்றிக்கொள்ளுங்கள்' என்று கூறினார். நித்யா கூறியது என்ன? என்று மும்தாஜ் உள்பட யாருக்கும் தெரியவில்லை
இந்த நிலையில் மும்தாஜிடம் பேசிய ரித்விகா இதுகுறித்து கூறியபோது, 'இந்த வீட்டில் உள்ள அனைவரின் பலவீனம் அன்புதான். ஏனெனில் நாம் எல்லோரும் குடும்பத்தை பிரிந்து இங்கு வந்துள்ளோம். நீங்கள் அந்த அன்பை அனைவரிடமும் காட்டுவது அவர்களுடைய பலவீனத்தை பயன்படுத்துவது போல் மக்களுக்கு தெரிந்திருக்கலாம்' என்று கூறினார்.
இதுகுறித்து நித்யா தனது சமூக வலைத்தளத்தில், 'நான் என்ன சொல்ல நினைத்தேனோ, அதை சரியாக ரித்விகா சொல்லியிருக்கின்றார். இந்த போட்டியில் ரித்விகா அல்லது பாலாஜி வெற்றி பெற பிரார்த்தனை செய்கிறேன்' என்று கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout