தனுஷுடன் மீண்டும் ஒரு திரைப்படம்.. தேசிய விருது பெற்ற பின் உறுதி செய்த நித்யா மேனன்..!

  • IndiaGlitz, [Wednesday,October 09 2024]

தனுஷ் நடித்த 'திருச்சிற்றம்பலம்’ என்ற திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக நித்யா மேனனுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்ட நிலையில், நேற்று அந்த விருதை குடியரசு தலைவரிடமிருந்து பெற்றுக் கொண்டார். அதன் பின், அவர் அளித்த பேட்டியில், மீண்டும் தனுஷுடன் ஒரு திரைப்படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார்.

தனுஷ், நித்யா மேனன், பிரகாஷ்ராஜ், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில், மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் உருவான திரைப்படம் 'திருச்சிற்றம்பலம்’. கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்று, ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது.

தற்போது, இந்த படத்தில் சிறப்பாக நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதை நடிகை நித்யா மேனன் பெற்றுள்ளார். விருது பெற்றபோது, அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

தேசிய விருதுக்கு காரணம், கேரக்டரை சரியாக புரிந்து கொண்டு, இயற்கையாக நடிப்பதுதான். முதல்முறையாக விருது வாங்கியதால், நான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன். இதுவரை நான் நடித்ததற்கு அதிகாரப்பூர்வ அங்கீகாரமாக இந்த விருதை பார்க்கிறேன். எந்த ஒரு கலைஞருக்கும் விருது முக்கியமானது. அதிலும், தேசிய விருது எனக்கு கிடைத்துள்ளதை அடுத்து, இந்த விருதை என் படக்குழுவினருக்கு சமர்ப்பிக்கிறேன், என்று தெரிவித்துள்ளார்.

மேலும் தனுஷுடன் நடித்த படத்திற்காக, தேசிய விருது கிடைத்த நிலையில் மீண்டும் அவருடன் ஒரு படத்தில் நடிக்கவுள்ளேன் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதனை அடுத்து, தனுஷ் நடித்து, இயக்கி வரும் ’இட்லி கடை’ படத்தில் நித்யா மேனன் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

More News

கமல்ஹாசன் - அன்பறிவ் படத்தின் முக்கிய அறிவிப்பு.. வேற லெவல் வீடியோ ரிலீஸ்..!

உலகநாயகன் கமல்ஹாசன் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'தக்லைப்' என்ற படத்தில் நடித்திருக்கும் நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தகவல்கள் விரைவில்

டின்னு சொல்லாதேன்னா சொல்லாதே.. ஆர்ஜே விஷாலிடம் ஆவேசமான பவித்ரா..

பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சி ஒரு வாரம் அல்லது இரண்டு வாரம் கழித்து விறுவிறுப்பாகும் என்ற நிலையில் இந்த சீசன் முதல் நாளிலிருந்து விறுவிறுப்பாகி உள்ளது என்பதும்

மாரி செல்வராஜின் 'வாழை'.. ஹாட் ஸ்டாரில் ஸ்ட்ரீம் ஆகும் தேதி அறிவிப்பு..!

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் வரும் அக்டோபர் 11 முதல், இயக்குனர் மாரி செல்வராஜின் சூப்பர் ஹிட் படமான “வாழை” திரைப்படத்தினை ஸ்ட்ரீம் செய்கிறது !!

எங்க வீட்டு கொலு : பிரபல செய்தி வாசிப்பாளர் ரத்னா வீட்டு கொலு Tour!

பிரபலமான செய்தி வாசிப்பாளர் ரத்னா அவர்கள், ஆன்மீகக்ளிட்ஸ் இணையதளத்திற்கு அளித்த பேட்டியில், நவராத்திரி கொலுவைப் பற்றி ஆழமாகப் பேசியுள்ளார்.

ஜாக்குலின் உளறலால் ஒட்டுமொத்த பெண்கள் டீமுக்கு ஆப்பு.. ரவீந்திரன் எடுத்த அதிரடி முடிவு..!

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில், ஆண்கள் டீம் மற்றும் பெண்கள் டீம் என தனித்தனியாக பிரிக்கப்பட்டுள்ள நிலையில், இருவருக்கும் சில அதிகாரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.