எனக்கு இப்போதுதான் காதல் வந்துள்ளது: நித்யாமேனன்

  • IndiaGlitz, [Thursday,November 28 2019]

சினிமா மீது தனக்கு இப்போதுதான் காதல் வந்துள்ளதாகவும், பெற்றோர்கள் நிச்சயித்த திருமணத்தில் காதல் தாமதமாக வருவது போல் தனக்கு சினிமாவின் மீது தாமதமாகவே காதல் வந்துள்ளதாகவும் நடிகை நித்யா மேனன் தெரிவித்துள்ளார்

கோவாவில் நடைபெற்று வரும் சர்வதேச திரைப்பட விழாவில் இன்று கலந்துகொண்ட நடிகை நித்யா மேனன் பார்வையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது தனது சினிமா அனுபவம் குறித்த கேள்விக்கு அவர் பதில் அளித்த போது ’ஆரம்பத்தில் தனக்கு சினிமாவின்மீது அதிக விருப்பம் இல்லை என்றும், காட்டு விலங்குகளை புகைப்படம் எடுப்பது தான் தனது ஆசையாக இருந்தது என்றும், ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலையால் தான் நடிகை ஆகி விட்டதாகவும் தெரிவித்தார்

காதல் திருமணத்தில் கணவன் மனைவியிடையே உடனடியாக அந்நோன்யம் வந்துவிடும் என்றும் ஆனால் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணத்தில் நாள் ஆக ஆகத்தான் காதல் ஆழமாக இருக்கும் என்றும், அதேபோல் எனக்கு சினிமா மீது நாள் ஆக ஆக காதல் ஏற்பட்டதாகவும் தற்போது சினிமா மீது தனக்கு முழு காதல் வந்துள்ளதாகவும் அவர் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த போது தெரிவித்தார்

மேலும் இயக்குனர்கள் தன்னை அதிகமாக வேலை வாங்கத் தேவையில்லை என்றும், ஒரு சீனை படித்துக் காட்டினால் அதை நான் புரிந்து கொண்டு நானாகவே நடித்து விடுவேன் என்றும், அந்த அளவுக்கு தான் இப்போது தேறி விட்டதாகவும் நடிகை நித்யா மேனன் கூறியுள்ளார்


 

More News

உன் தங்கச்சிய தூக்கிட்டு போவோன்: சவால் விட்ட இளைஞரின் துண்டான தலை!

நெல்லையில் 19 வயது வான்மதி என்ற பெண்ணை, நம்பிராஜன் என்ற 23 வயது வாலிபர் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த

ஷாப்பிங் அழைத்து செல்ல மறுத்த காதலன் மீது ஆசிட் வீசிய காதலி

தன்னுடன் பேசிக்கொண்டே இருக்க வேண்டும் என்றும், அடிக்கடி ஷாப்பிங் அழைத்துச் செல்ல வேண்டும் என்றும் காதலி வலியுறுத்திய நிலையில் அதற்கு மறுத்த காதலன் மீது காதலி ஆசிட் வீசிய சம்பவம்

30ஆம் தேதிக்கு மேல் 'வச்சு செய்யப்போகுது மழை': தமிழ்நாடு வெதர்மேன்

சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் நேற்றிரவு கனமழை பெய்த நிலையில் இதெல்லாம் ஒரு மழையே இல்லை, இனிமேல் தான் சென்னைக்கு பலத்த மழை என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

கல்லா பெட்டியில் கைவைக்காமல் வெங்காயத்தை மட்டும் திருடிய திருடர்கள்

நகைக் கடைகளில் திருடுபவர்கள் கல்லாப்பெட்டியை கண்டுகொள்ளாமல் தங்கம் மற்றும் வைர நகைகளை திருடுவதில் மட்டுமே கண்ணும் கருத்துமாக இருப்பார்கள்.

கமல்ஹாசன் சிகிச்சை குறித்து மக்கள் நீதி மய்யம் முக்கிய அறிவிப்பு!

உலக நாயகனும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் அவர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தன்னுடைய வீட்டில் படிக்கட்டில் இருந்து கீழே விழுந்ததால்