தனுஷின் 'இட்லி கடை': நித்யா மேனன், அசோக் செல்வன், அருண் விஜய் கேரக்டர்கள் என்ன?

  • IndiaGlitz, [Tuesday,September 24 2024]

தனுஷ் நடித்தும் இயக்கியும் வரும் ‘இட்லி கடை’ என்ற படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இதில் முக்கியக் கதாபாத்திரங்களில் நித்யா மேனன், அருண் விஜய், மற்றும் அசோக் செல்வன் நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், இவர்களின் கதாபாத்திரங்கள் குறித்த தகவல்கள் தற்போது கசிந்துள்ளது.

தனுஷ் இயக்கிய ’ராயன்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில், அவர் தற்போது ’நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்த நிலையில், அடுத்ததாக ’இட்லி கடை’ என்ற படத்தை இயக்கத் தொடங்கியுள்ளார் என்பதும், இதில் ஹீரோவாக நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

’இட்லி கடை’ படத்தில் தனுஷ் ஜோடியாக நித்யா மேனன் நடிக்க இருப்பதாகவும், ’திருச்சிற்றம்பலம்’ படத்திற்கு பிறகு மீண்டும் இந்த ஜோடி இணைகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், முதல் முறையாக தனுஷ் படத்தில் வில்லனாக அருண் விஜய் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். கடந்த சில ஆண்டுகளாக ஹீரோவாக நடித்து வரும் அவர், இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரம் வலிமையாக இருப்பதால், வில்லனாக நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். அதேபோல், அசோக் செல்வன், தனுஷின் சகோதரராக நடிக்கிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு தேனி அருகே நடைபெற்று வரும் நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற உள்ளது. அதற்கான ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது. முழுக்க முழுக்க ரொமான்ஸ் மற்றும் குடும்ப செண்டிமெண்ட் கதையம்சம் கொண்ட இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படத்தை அறிமுக தயாரிப்பாளர் ஆகாஷ் தயாரிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.