நேற்று பாலாஜி, இன்று மகத்: தொடரும் நித்யாவின் மோதல்

  • IndiaGlitz, [Friday,June 29 2018]

பிக்பாஸ் வீட்டில் உள்ள 16 போட்டியாளர்களில் நித்யாவுக்கும் இன்னொருவருக்கும் மட்டுமே இதுவரை பிரச்சனை வந்து கொண்டிருக்கின்றன. முதல் வாரம் வெங்காய பிரச்சனையில் கிட்டத்தட்ட எல்லோருமே நித்யாவை குறை கூறினர். அதன் பின்னர் பாலாஜியிடம் அடிக்கடி மோதி வரும் நித்யா, இன்று மகத்துடன் மோதுவதாக சற்றுமுன் வெளியாகியுள்ள வீடியோவில் தெரிகிறது.

நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் எஜமானியாக இருக்கும் நித்யாவை வேலைக்காரரான பாலாஜி கெட்ட வார்த்தையில் திட்டியதாக ஒரு பஞ்சாயத்து நடந்தது. இதற்காக பாலாஜிக்கு இந்த டாஸ்க் முடியும் வரை பேசக்கூடாது என்ற தண்டனையும் கொடுக்கப்பட்டது

இந்த நிலையில் சற்றுமுன் வெளியான புரமோ வீடியோவில் நித்யா சாப்பாட்டை கொட்டியதற்கு மகத் கண்டிக்கின்றார். தான் ஒன்றும் நாய் இல்லை என்றும், சாப்பாட்டை மரியாதை இல்லாமல் கொடுத்ததால் கொட்டியதாகவும் நித்யா விளக்கமளிக்கின்றார். இருப்பினும் சாப்பாட்டை கொட்டியது தப்பு என்று மகத் கண்டிக்க, இதனால் நித்யாவுக்கும் மகத்துக்கும் மோதல் வெடிப்பதாக இன்றைய வீடியோவில் இருந்து தெரிகிறது.

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டின் தலைவியாக நித்யா இருப்பதால் அவரது பெயர் எவிக்சனிலும் இடம்பெறவில்லை. போட்டியாளர்களை மட்டுமின்றி பார்வையாளர்களையும் வெறுப்பேற்றி வரும் நித்யாவை அடுத்த வாரம் மக்கள் வாக்குகள் மூலம் வெளியேற்றுவார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். ஏற்கனவே வேலைக்காரி டாஸ்க்கில் நித்யா சரியாக வேலை செய்யாததால் அவர் நேரடியாக அடுத்த வார எவிக்சன் பட்டியலில் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

More News

நயன்தாராவின் 'கோலமாவு கோகிலா' சென்சார் தகவல்கள்

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்து முடித்துள்ள 'கோலமாவு கோகிலா' திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது

கார்த்தியின் 'கடைக்குட்டி சிங்கம்' சென்சார் மற்றும் ரிலீஸ் தேதி தகவல்கள்

கார்த்தி, சாயிஷா நடிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா தயாரிப்பில் உருவாகியுள்ள 'கடைக்குட்டி சிங்கம்' படத்திற்கு ரிலீசுக்கு முன்னரே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

பிக்பாஸ் வீட்டில் புதிய டுவிஸ்ட்: எஜமானர்களாக மாறிய பெண்கள்

பிக்பாஸ் வீட்டில் கடந்த மூன்று நாட்களாக ஆண்கள் எஜமானர்களாகவும், பெண்கள் வேலைக்காரிகளாகவும் இருக்கும் டாஸ்க் நடந்து கொண்டிருந்தது.

பிரகாஷ்ராஷை கொலை செய்ய திட்டமிட்டோம்: கைதான குற்றவாளி பரபரப்பு வாக்குமூலம்

பெங்களூரில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பெண் பத்திரிகையாளார் கவுரி லங்கேஷ் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்டார்.

ஸ்டெர்லைட் விவகாரம்: ஜக்கிவாசுதேவுக்கு பிரபல தமிழ் நடிகர் கண்டனம்

தூத்துகுடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அந்த பகுதி மக்கள் நடத்திய போராட்டம் 13 பேர் பலியுடன் ஒருவழியாக முடிவுக்கு வந்தது.