இளைஞருடன் டூயட் பாடிய தாடி பாலாஜி மனைவி நித்யா: தட்டிக்கேட்டவருக்கு கொடுத்த பதிலடி!

தமிழ் சினிமாவின் காமெடி நடிகர்களில் ஒருவரான தாடி பாலாஜிக்கும் அவரது மனைவிக்கும் கடந்த சில ஆண்டுகளாக கருத்து வேறுபாடு ஏற்பட்டதை அடுத்து இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருவரும் ஒன்றாக போட்டியாளர்களாக வந்த நிலையில் அந்த நிகழ்ச்சியில் இறுதியில் கமலஹாசன் முன் மீண்டும் இணைந்து விட்டதாக இருவரும் கூறினாலும் அதன் பின் மீண்டும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நித்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவ்வாக இருப்பார் என்பதும் குறிப்பாக சமீபகாலமாக அவர் மாடர்ன் உடை அணிந்து பதிவு செய்யும் புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் அவர் இளைஞர் ஒருவருடன் டூயட் பாடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவுக்கு லைக்ஸ்கள் குவிந்தாலும் ஒரு சில ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து ’உங்களுக்கு திருமணமாகி ஒரு குழந்தை இருக்கிறது அதை மறந்துவிட வேண்டாம்’ என்று கூறியிருந்தனர். அதற்கு பதிலடி கொடுத்த நித்யா ’குரைக்கும் நாய் குரைக்கட்டும்’ என்று பதிவு செய்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.