close
Choose your channels

விஜய்சேதுபதிக்கு ஒரு 'மகாராஜா'..நயன்தாராவுக்கு ஒரு 'மகாராணி'.. நிதிலன் அடுத்த சம்பவம்..!

Monday, August 12, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நிதிலன் சுவாமிநாதன் இயக்கத்தில் உருவான ’மகாராஜா’ என்ற திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் 100 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை செய்தது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் நிதிலன் சுவாமிநாதன் இயக்கத்தில் உருவாக இருக்கும் அடுத்த திரைப்படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்க இருப்பதாகவும் இந்த படத்திற்கு ’மகாராணி’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விஜய் சேதுபதி நடிப்பில் நிதிலன் சுவாமிநாதன் இயக்கத்தில் உருவான ’மகாராஜா’ திரைப்படம் கடந்த ஜூன் மாதம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. 20 கோடி ரூபாய் தயாரிப்பில் உருவான இந்த படம் 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து விஜய் சேதுபதியின் ஐம்பதாவது படம் மிகப்பெரிய வெற்றி படம் என்ற பெருமையை பெற்றது.

இந்த நிலையில் ’மகாராஜா’ படத்தை தயாரித்த பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் மீண்டும் நிதிலன் சுவாமிநாதன் இயக்கும் படத்தை தயாரிக்க இருப்பதாகவும் இந்த படத்தில் நயன்தாரா முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்திற்கு ’மகாராணி’ என்ற டைட்டில் வைக்கப்பட்டு இருப்பதாக கூறப்படும் நிலையில் இந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.

ஒரு கதாநாயகனாக நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய் சேதுபதிக்கு ’மகாராஜா’ ஒரு வெற்றி படமாக அமைந்த நிலையில் ஒரு கதாநாயகியாக நயன்தாராவுக்கு ’மகாராணி’ திரைப்படம் ஒரு வெற்றி படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment