close
Choose your channels

'ஜெயம்' படத்தில் அறிமுகமான இளம் ஹீரோவின் திருமண தேதி!

Saturday, July 18, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த 2002ஆம் ஆண்டு ’ஜெயம் என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் நிதின். இந்த திரைப்படம் தமிழில் அதே டைட்டிலில் கடந்த 2003ஆம் ஆண்டு உருவானது என்பதும் இந்த படத்தின் மூலம் தான் ஜெயம் ரவி ஹீரோவாக அறிமுகமானார் என்பதும் குறிப்பிடத்தக்கது

பிரபல தெலுங்கு பட தயாரிப்பாளரான சுதாகர் ரெட்டியின் மகனான நிதினுக்கு கடந்த பிப்ரவரி மாதம் ஷாலினி என்ற பெண்ணுடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இவர்களது திருமணம் ஏப்ரல் மாதம் நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக திருமண தேதி தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது

இந்த நிலையில் தற்போது ஜூலை 26ஆம் தேதி ஐதராபாத்தில் நிதின் மற்றும் ஷாலினி திருமணம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திருமணத்தில் ஊரடங்கு உத்தரவு காரணமாக மிகவும் நெருக்கமான உறவினர்கள் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. நிதின் - ஷாலினி திருமண தேதி வெளியானதை அடுத்து நிதின் ரசிகர்கள் அவருக்கு சமூக வலைதளங்கள் மூலம் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

நடிகர் நிதின் தற்போது ‘ராங்டே’ என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பதும், கீர்த்திசுரேஷ் நாயகியாக நடிக்கும் இந்த படத்தை வெங்கி என்பவர் இயக்கி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment