மனைவி புகார் எதிரொலி: தாடி பாலாஜி மீது கொலைமிரட்டல் வழக்கு

  • IndiaGlitz, [Tuesday,July 04 2017]

கடந்த சில மாதங்களாகவே காமெடி நடிகர் தாடி பாலாஜிக்கும் அவரது மனைவி நித்யாவுக்கும் கருத்துவேறுபாடு இருந்த நிலையில் கடந்த மே மாதம் 23 ந்தேதி மாதவரம் போலீசில் புகார் நித்யா புகார் ஒன்றை அளித்தார். இந்த புகாரில் தனது கணவர் பாலாஜி தன்னை சாதி பெயர் சொல்லி திட்டியதாகவும், தன்னை கொடுமைப்படுத்தியதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த புகார் மனுமீது மாதவரம் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்யவில்லை என்றும் மீண்டும் சமீபத்தில் சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு ஒன்றை நித்யா அளித்தார்.
இதனையடுத்து தற்போது சென்னை கமிஷனரின் உத்தரவின் பேரில் தாடி பாலாஜி மீது, பெண் வன்கொடுமை சட்டம், ஆபாசமாக திட்டுதல், தகாத வார்த்தைகளால் தரக்குறைவாக பேசுதல், கொலை மிரட்டல், ஆபத்து ஏற்படுத்தும் வகையில் தாக்கியது என 4 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

More News

பஞ்சாயத்து தேர்தலுக்காக பக்காவாக தயாராகும் விஜய்

இளையதளபதி விஜய்யின் சமீபத்திய நடவடிக்கைகள் அரசியலை நோக்கி சென்று கொண்டிருப்பதாக அரசியல் விமர்சகர்கள் தொலைக்காட்சி விவாதங்களில் கூறி வரும் நிலையில் விஜய் அதிரடியாக அரசியல் களத்தில் இறங்க தயாராகிவிட்டார்.

'வேலைக்காரன்' படத்தை முந்தியது மகேஷ்பாபுவின் 'ஸ்பைடர்'

பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் பிரின்ஸ் மகேஷ்பாபு நடித்து வரும் 'ஸ்பைடர்' படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் இன்னும் ஒரே ஒரு பாடல் காட்சி மட்டுமே மீதமுள்ளது.

நான் தினமும் மூன்று பெண்களுடன் தூங்குவேன்: ராம்கோபால் வர்மா

பிரபல தெலுங்கு இயக்குனர் ராம்கோபால்வர்மா தனது டுவிட்டரில் அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவு செய்து வருபவர் என்பது தெரிந்ததே

இன்னும் வலுவான போராட்டங்களை எதிர்பார்க்கிறேன். கமல்ஹாசன்

கடந்த 1ஆம் தேதியில் இருந்து ஒரே நாடு ஒரே வரி என்ற முழக்கத்துடன் ஜிஎஸ்டி வரி நடைமுறைக்கு வந்தது. ஆனால் மத்திய அரசின் ஜிஎஸ்டி வரியுடன் மாநில அரசின் வரியும் சேர்ந்து கொண்டதால் ஒருசில துறையினர் இரட்டை வரி என்ற கொடுமைக்கு ஆளாகியுள்ளனர்

பழைய ரூ.500, ரூ1000 நோட்டுக்களை மாற்ற மீண்டும் ஒரு வாய்ப்பு!

மத்திய அரசு கடந்த நவம்பர் மாதம் 8ஆம் தேதி ரூ.500 மற்றும் ரூ.1000 செல்லாது என்று அதிரடியாக அறிவித்தது.