நடிகையர் திலகம் ஆகிறார் நித்யாமேனன்

  • IndiaGlitz, [Thursday,August 18 2016]

நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு இணையாக நடிக்கக்கூடிய திறமை உள்ளவர் என்பதால்தான் பழம்பெரும் நடிகை சாவித்திரிக்கு நடிகையர் திலகம் என்ற பட்டம் கிடைத்தது. எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்த இவரது நடிப்பின் சாயல் இல்லாத நடிகையே இல்லை என்று கூறலாம்.
இந்நிலையில் பிரபல தெலுங்கு இயக்குனர் நாக் அஸ்வின், சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக உருவாக்கவுள்ளார். அவருடைய வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி திரைக்கதையை தயார் செய்துள்ள அவர், சாவித்திரியின் கேரக்டரில் நடிக்க நித்யாமேனனை அணுகியுள்ளார். 'ஓகே கண்மணி' படத்திற்கு பின்னர் நல்ல வாய்ப்புகளை பெற்று வரும் நித்யாமேனன், மகிழ்ச்சியுடன் சாவித்திரி வேடத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் மிக விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
சாவித்திரியின் வாழ்வில் பல ஏற்ற இறக்கங்கள் இருந்த போதிலும் இந்த படத்தில் அவருடைய வாழ்க்கையில் நடந்த பாசிட்டிவ் சம்பவங்களை மட்டுமே இயக்குனர் தொகுத்து வழங்கவுள்ளார் என்று கூறப்படுகிறது.

More News

சூப்பர் ஸ்டார் ரஜினியிடம் இருந்து பாராட்டு பெற்ற படக்குழு இதுதான்!

பிரபல எழுத்தாளர் ராஜூமுருகன் இயக்கிய 'ஜோக்கர்' திரைப்படத்தை பொதுமக்கள் மட்டுமின்றி அரசியல்வாதிகளும் கோலிவுட் பிரபலங்களும் தொடர்ந்து பாராட்டி வருவதையும்,...

பெங்காலி மொழியில் ரீமேக் ஆகும் சூப்பர் ஹிட் தமிழ்ப்படம்

கடந்த ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ஜெயம் சகோதரர்களின் 'தனி ஒருவன்' திரைப்படம் 'துருவா' என்ற பெயரில்...

'2.0' ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ் தேதி. ராஜூ மகாலிங்கம் அறிவிப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கி வரும் '2.0' படத்தின் டீசர் பணிகள் நடைபெற்று வருவதாகவும்...

சிம்புவின் 'AAA' படத்துக்கு எத்தனை டீசர்

இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்'...

ரஜினி வில்லனுடன் நிர்வாண போஸ் கொடுத்த ராதிகா ஆப்தே. அதிர்ச்சி தகவல்

நடிகை ராதிகா ஆப்தே பிரகாஷ்ராஜின் 'தோனி' மற்றும் கார்த்தியின் 'பிரியாணி' ஆகிய படங்களில் நடித்திருந்தாலும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'கபாலி' படத்தால் உலக அளவில் பிரபலம் ஆகிவிட்டார்...