ஜப்பான் நிசான் கார் கம்பெனியின் தலைவர் திடீர் கைது
- IndiaGlitz, [Tuesday,November 20 2018]
உலகின் முன்னணி கார் நிறுவனங்களில் ஒன்றான ஜப்பானை சேர்ந்த நிசான் கார் கம்பெனியின் தலைவர் கார்லோஸ் கோஷ் என்பவர் நேற்று அந்நாட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டுளார். கோஷ் நிதி முறைகேட்டில் ஈடுப்பட்டதால் கைது செய்யப்பட்டுள்ளதாக முதல்கட்ட தகவல்கள் வெளிவந்துள்ளது.
நிசான் நிறுவனத்தில் நிதி முறைகேடு செய்ததாகவும், வருமானத்தை குறைத்து கணக்கு காட்டியதாகவும் கார்லோஸ் கோஷ் மீது குற்றச்சாட்டு எழுந்த நிலையில் நேற்று அவரை டோக்கியோ போலீசார் விசாரணை செய்தனர். விசாரணையின் முடிவில் அவர் நிதிமோசடி செய்தது உறுதி செய்யப்பட்டதால் அவரை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து நிசான் கார் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது: கார்லோஸ் கோஷ், மீது கூறப்பட்ட புகாரை குறித்து விசாரணை நடந்ததாகவும், இந்த கோஷ் மற்றும் கிரேக் கெல்லி ஆகிய இருவரும் பல வருடங்களாக முறைகேடுகளில் ஈடுபட்டது தெரியவந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.