ஆன்லைனில் ரிலீஸ் ஆகிறதா அனுஷ்கா படம்? தயாரிப்பு தரப்பு விளக்கம்

  • IndiaGlitz, [Wednesday,April 22 2020]

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இரண்டாம் கட்ட ஊரடங்கு உத்தரவு தற்போது நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த ஊரடங்கு உத்தரவு மே 3ஆம் தேதி வரை நீடிக்கும் என்பதும், மே 3ஆம் தேதிக்கு பின்னரும் கொரோனா தாக்கம் இருந்தால் ஊரடங்கு உத்தரவு நீடிக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஒருவேளை மே 3ஆம் தேதிக்கு பின்னர் ஊரடங்கு உத்தரவு இல்லை என்றாலும் திரையரங்குகள் திறப்பதற்கு சில கட்டுப்பாடுகள் இருக்கும் என்றும் ஜூன் மாதத்திற்குப் பின்னரே திரையரங்குகள் திறக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது

இந்த நிலையில் ஏற்கனவே ரிலீசுக்கு தயாராகி உள்ள பல திரைப்படங்கள் ரிலீஸ் செய்ய முடியாமல் சிக்கலில் உள்ளதால் ஒரு சில படங்களை ஓடிடி பிளாட்பாரத்தில் நேரடியாக ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் மாதவன், அனுஷ்கா, அஞ்சலி நடித்த ’நிசப்தம்’ திரைப்படமும் ஆன்லைனில் வெளியாக வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளியானது

ஆனால் இந்த செய்திக்கு தயாரிப்பு தரப்பு மறுப்பு தெரிவித்துள்ளது. இதுபோன்ற வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்றும், கண்டிப்பாக இந்த படம் ஓடிடி பிளாட்பாரத்தில் ரிலீஸ் ஆகாது என்றும் ’நிசப்தம்’ படத்தின் தயாரிப்பு தரப்பு தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தை ஹேமந்த் மதுக்கூர் இயக்கியுள்ளார்.

More News

கொரோனாவால் உலகம் முழுவதும் பசி, பட்டிணி இரட்டிப்பாகும்!!! ஐ.நா. சபை எச்சரிக்கை!!!

“கொரோனா வைரஸ் பாதிப்பு உலகளவில் பசி, பட்டிணியின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கும்” என ஐ.நா. சபை எச்சரித்துள்ளது.

ஊரடங்கு நேரத்திலும் திகிலூட்டும் தங்கத்தின் விலை!!! ஏன் இந்த நிலைமை???

கொரோனா பாதிப்பினால் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. யாரும் கடைகளில் தங்கத்தை விற்கவுமில்லை.

கொரோனாவைத் தடுக்கும் புரதம்: முதற்கட்ட ஆய்வில் வெற்றிப்பெற்றுள்ள எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம்!!!

கொரோனா தடுப்பு மருந்துகளுக்கான ஆராய்ச்சியில் உலக நாடுகள் வேகமாகப் பணியாற்றி வருகின்றன.

கொரோனா வைரஸ் தடுப்பு நிதி கொடுத்த தளபதி விஜய் கொடுத்த மிகப்பெரிய தொகை!

கொரோனா வைரஸ் தடுப்பு நிதியாக கோலிவுட்டின் பல பிரபல நடிகர்கள் லட்சக்கணக்கிலும் கோடிக்கணக்கிலும் நிதியுதவி செய்த நிலையில் கோலிவுட்டின் மாஸ் நடிகரான தளபதி விஜய்யிடம்

கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டிபிடிப்பதில் முதல்கட்ட வெற்றி: தமிழகம் சாதனை

கொரோனா வைரஸை ஒழிக்க இதுவரை தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்பதும், இதற்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்க உலகம் முழுவதும் மருத்துவர்கள்