வீடு திரும்பிய நிஷாவுக்கு குடும்பத்தினர் எடுத்த ஆரத்தி: வைரலாகும் வீடியோ!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் வீட்டில் இருந்து நேற்று நிஷா வெளியேற்றப்பட்டார் என்பது தெரிந்ததே. எதிர்பார்த்தது போலவே நிஷாவின் வெளியேற்றத்தின் போது அர்ச்சனா உடைந்து அழுதார் என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய நிஷா நேற்று தனது வீட்டில் காரில் வந்து இறங்கும் வீடியோ இறங்கும் காட்சிகளும் அவருக்கு அவரது குடும்பத்தினர் ஆரத்தி எடுத்து வரவேற்பு காட்சிகளும் கொண்ட வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
மேலும் பிக்பாஸ் வீட்டில் இருந்து திரும்பிய நிஷா கடந்த 70 நாட்களாக பிரிந்து இருந்த தனது குழந்தையை கட்டிப்பிடித்து அன்பு முத்தம் பொழிந்த காட்சிகளும் அந்த வீடியோவில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ’வெல்கம் டு அறந்தாங்கி நிஷா’ என்ற வாசகம் கொண்ட கேக்கை நிஷா குடும்பத்தினர் வெட்டி மகிழ்ச்சியை கொண்டாடினர்.
முன்னதாக நேற்று கமல்ஹாசனிடம் பேசிய நிஷா, ஆரம்பத்தில் சரியாக தான் விளையாடியதாகவும் இருப்பினும் யார் மனத்தையும் நோகடிக்காமல் விளையாட வேண்டும் என்று தனது பாணியை மாற்றியது தனது தவறு என்பதை தற்போது புரிந்து கொண்டதாகவும் கூறினார்.
நேற்று நிஷா வெளியேறியபோது பாலாஜி, ‘உங்களை யாருக்கும் பிடிக்காமல் அனுப்பவில்லை, நீங்கள் இந்த விளையாட்டுக்கு மட்டுமே ஃபிட் இல்லை என்று தான் அனைவரும் கருதினோம்’ என்று கூறியதே பெரும்பாலான பார்வையாளர்களின் கருத்தாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
#Nisha is back to home after 70 days in the #BiggBossTamil house. #BiggBossTamil4pic.twitter.com/vO0fuyDLZM
— Cinema Ticket (@CinematicketYT) December 14, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments