நிஷாவின் டபுள்கேம்: தோலுரித்த நெட்டிசன்களின் குறும்படம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் வீட்டில் நேற்று புதிய மனிதா டாஸ்க்கின் போது அர்ச்சனாவுக்கு பாக்ஸி ரோபோ என பெயர் வைத்தது நான் இல்லை என்றும், நீதான் என்றும் நிஷா, நேற்று அனிதாவிடம் ஆவேசமாக வாதாடினார். ஆனால் நிஷாவும் ஆரியும் இணைந்துதான் இந்த பெயரை முடிவு செய்தனர் என்பது தற்போது நெட்டிசன்களின் குறும்படம் மூலம் தெரிய வந்துள்ளதால் நிஷாவின் டபுள் கேம் கலைந்துள்ளது
இந்த குறும்படத்தில் அர்ச்சனாவுக்கு பாக்ஸி ரோபோ என பெயர் வைக்கலாம் என அனிதா கூறும்போது ஆரி ‘நான் ஏற்கனவே நிஷாவிடம் சொல்லிட்டேனே அர்ச்சனா பாக்ஸி ரோபோ தான்’ என்று கூறியபோது நிஷாவும் அதை ஆமோதித்தார். மேலும் பாக்ஸி ரோபோ என்பது அர்ச்சனாவுக்கு பொருத்தமாக இருப்பதாக் ஆரி கூறியபோதும் எந்தவிதமான எதிர்ப்பையும் தெரிவிக்காத நிஷா, அதனை ரசித்து கேட்டு கொண்டிருந்தார்
மேலும் சோம்சேகருக்கு ‘பப்பட் ரோபோ’ என பெயர் வைக்கலாம் என கூறியதும் நிஷா தான். அதேபோல் ரம்யாவுக்கும் சாப்ட் ரோபோ என்றும் ஷிவானிக்கு மேக்கப் ரோபோ என்றும் பெயர் வைத்ததும் நிஷா தான் என்பது அந்த குறும்படத்தில் தெரிய வருகிறது. ஆக, எல்லோருக்கும் பெயர் வைத்து செய்வதை எல்லாம் தானே செய்துவிட்டு, அதன்பின் நிஷா அனிதாவிடம் சண்டை போட்டது அவருடைய ஃபேவரிட்டிஸம் மற்றும் இரட்டை வேடத்தை வெளிப்படுத்துவதாக இந்த குறும்படம் அமைந்துள்ளது. இந்த குறும்படத்தை கமல்ஹாசன் போட்டு காட்டினால் நிஷாவிடன் இரட்டை வேடம் கலைய வாய்ப்பு உள்ளது. கமல் செய்வாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
#Day67 #Promo2 of #BiggBossTamil #பிக்பாஸ் - தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/jJfzKUqemt
— Vijay Television (@vijaytelevision) December 10, 2020
Fraud #Nisha changing the story ..
— Fun Samugam (@FSamugam) December 11, 2020
naming of Robos - she named #Som as puppet, #Shivani makeup & #Ramya as soft hurt .#Aaari named archana & Jithan and agrees only. #BiggBossTamil #BiggBossTamil4 pic.twitter.com/KQpCCzzxZs
#Nisha ku konjam memory loss
— BIG BOSS 4 Paridhabangal (@BBPFriends20) December 10, 2020
Enna oru alluguni attam aduranga
Love bed statergy polla
??♂️??♂️??♂️#BiggbossTamil4 #BiggBoss4Tamil https://t.co/Mk9KEYdOHT pic.twitter.com/Uqb4QsIzFD
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com
Comments