வெப்ப மண்டல புயல் காற்றாக வீசிய நிசர்கா புயல்!!! மகாராஷ்டிராவில் 4 பேர் உயிரிழப்பு!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த செவ்வாய்க் கிழமை தெற்கு அரபிக்கடல் பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் சூறாவளி புயல் உருவானது. இந்தப் புயல் நேற்று மதியம் மும்பை அடுத்த ராய்கட் பகுதியில் கரையைக் கடக்கும் எனவும் கூறப்பட்டு இருந்தது. இந்தப் புயல் கடைசி நேரத்தில் வெப்ப மண்டல புயலாக மாறியதாகவும் கடந்த 129 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது வெப்ப மண்டல புயல் மும்பை பகுதியைத் தாக்கி இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து இருக்கிறது. வெப்ப மண்டல புயல் உருவாகும்போது கடும் தீப்பிளம்புகள் ஏற்பட்டதாகவும் இந்த தீப்பிளம்புகள் அடங்குவதற்கு சுமார் 6 மணி நேரம் எடுத்துக் கொண்டதாகவும் செய்தி வெளியாகி இருக்கின்றன.
புயல் கரையைக் கடக்கும்போது சுமார் 120 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று பலமாக வீசியதாகவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து இருக்கிறது. குஜராத் மற்றும் மகாராஷ்டிராவின் கடற்கரை பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் கட்டிடங்கள் கடுமையாகப் பாதிக்கப் பட்டு உள்ளன. மேலும் மகாராஷ்டிராவில் புயலின் தாக்கத்தால் 4 பேர் உயிரிழந்து இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. கடற்கரை ஓரங்களில் காற்று பலமாக வீசியதாகவும் கடல் சீற்றத்துடன் காணப்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது. சூறாவளி காற்று வீசும்போது மின்னலோடு பலத்தக் காற்று வீசியதால் பல்லாயிரக்கணக்கான மரங்கள் அடியோடு வீழ்த்தப்பட்டுள்ளன.
கடந்த மே மாதம் 29 ஆம் தேதி மேற்கு வங்கம் நோக்கி உண்டான ஆம்பன் புயலால் 100க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகிய நிலையில் தற்போது நிசர்கா புயல் ஏற்படுத்திய பாதிப்பினால் 4 பேர் உயிரிழந்து விட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் கடந்த 129 ஆண்டுகளுக்குப் பிறகு வெப்ப மண்டல புயல் காற்று தீப்பிளம்போடு மும்பை நகரை தாக்கியிருப்பதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதிக கொரோனா எண்ணிக்கை உள்ள மகாராஷ்டிரா மாநிலத்தில் புறல் காற்றால் ஏற்பட்ட பாதிப்பும் மக்களை அதிக சிரமத்திற்கு ஆளாக்கி இருப்பதாக தற்போது கவலை தெரிவிக்கப் பட்டு வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments