வெப்ப மண்டல புயல் காற்றாக வீசிய நிசர்கா புயல்!!! மகாராஷ்டிராவில் 4 பேர் உயிரிழப்பு!!!

  • IndiaGlitz, [Thursday,June 04 2020]

 

கடந்த செவ்வாய்க் கிழமை தெற்கு அரபிக்கடல் பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் சூறாவளி புயல் உருவானது. இந்தப் புயல் நேற்று மதியம் மும்பை அடுத்த ராய்கட் பகுதியில் கரையைக் கடக்கும் எனவும் கூறப்பட்டு இருந்தது. இந்தப் புயல் கடைசி நேரத்தில் வெப்ப மண்டல புயலாக மாறியதாகவும் கடந்த 129 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது வெப்ப மண்டல புயல் மும்பை பகுதியைத் தாக்கி இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து இருக்கிறது. வெப்ப மண்டல புயல் உருவாகும்போது கடும் தீப்பிளம்புகள் ஏற்பட்டதாகவும் இந்த தீப்பிளம்புகள் அடங்குவதற்கு சுமார் 6 மணி நேரம் எடுத்துக் கொண்டதாகவும் செய்தி வெளியாகி இருக்கின்றன.

புயல் கரையைக் கடக்கும்போது சுமார் 120 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று பலமாக வீசியதாகவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து இருக்கிறது. குஜராத் மற்றும் மகாராஷ்டிராவின் கடற்கரை பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் கட்டிடங்கள் கடுமையாகப் பாதிக்கப் பட்டு உள்ளன. மேலும் மகாராஷ்டிராவில் புயலின் தாக்கத்தால் 4 பேர் உயிரிழந்து இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. கடற்கரை ஓரங்களில் காற்று பலமாக வீசியதாகவும் கடல் சீற்றத்துடன் காணப்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது. சூறாவளி காற்று வீசும்போது மின்னலோடு பலத்தக் காற்று வீசியதால் பல்லாயிரக்கணக்கான மரங்கள் அடியோடு வீழ்த்தப்பட்டுள்ளன.

கடந்த மே மாதம் 29 ஆம் தேதி மேற்கு வங்கம் நோக்கி உண்டான ஆம்பன் புயலால் 100க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகிய நிலையில் தற்போது நிசர்கா புயல் ஏற்படுத்திய பாதிப்பினால் 4 பேர் உயிரிழந்து விட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் கடந்த 129 ஆண்டுகளுக்குப் பிறகு வெப்ப மண்டல புயல் காற்று தீப்பிளம்போடு மும்பை நகரை தாக்கியிருப்பதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதிக கொரோனா எண்ணிக்கை உள்ள மகாராஷ்டிரா மாநிலத்தில் புறல் காற்றால் ஏற்பட்ட பாதிப்பும் மக்களை அதிக சிரமத்திற்கு ஆளாக்கி இருப்பதாக தற்போது கவலை தெரிவிக்கப் பட்டு வருகிறது.


 

More News

ஜார்ஜ் ஃபிளாய்ட் மரணத்துக்கு அஞ்சலி செலுத்திய இறுதி ஊர்வலம்!!! வருத்தம் தெரிவித்து உரையாற்றிய மேயர்!!!

கடந்த மே 25 ஆம் தேதி காவல் துறையினரின் கொடூரத் தாக்குதலால் உயிரிழந்த ஜார்ஜ் ஃபிளாய்ட் மரணத்திற்கு செவ்வாய்கிழமை அமைதியான முறையில் ஊர்வலம் நடைபெற்றது.

கொரோனாவை பரப்பியதாக அமேசான் நிறுவனத்தின்மீது தொடரப்பட்ட வழக்கு!!! பரபரப்பு கட்டத்தில் ஆன்லைன் வர்த்தகம்!!!

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் உள்ள புரூக்ளினில் பெடரல் நீதிமன்றத்தில் அமேசான்.காம் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

பிரச்சனை வந்தவுடன் ஓடுவதா? 'காட்மேன்' குறித்து பா.ரஞ்சித் கருத்து

இயக்குனர் பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் டேனியல் பாலாஜி, சோனியா அகர்வால், ஜெயப்பிரகாஷ் நடிப்பில் உருவான 'காட்மேன்' வெப்தொடரின் டீசர் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த தொடருக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த

ஓட்டின் மேல் ஏறி உட்கார்ந்த கல்லூரி மாணவி, உதவி செய்த பெற்றோர்கள்: ஆன்லைன் படுத்தும்பாடு

கேரளாவைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் ஆன்லைன் வகுப்புகளை கவனிப்பதற்காக ஓட்டின் மீது ஏறி உட்கார்ந்து கொண்டு பாடத்தை கவனித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

விஜய்மல்லையா எந்நேரத்திலும் இந்தியாவிற்கு வரலாம்!!! தகவல் தெரிவித்த அமலாக்கத்துறை!!!

கிங்க் ஃபிஜர் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி மற்றும் இந்தியாவின் பிரபல தொழிலதிபராக இருந்த விஜய் மல்லையா பண மோசடியில் ஈடுபட்டதாகப் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கிறது.