நிசர்கா புயல் தீவிரம்!!! கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மும்பை கடுமையாகப் பாதிக்கப்படும்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
தென் கிழக்கு அரபிக்கடல் பகுதியில் உருவாகியிருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் உருவான நிசர்கா புயல் தற்போது அதிதீவிரப் புயலாக மாறியிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து இருக்கிறது. இந்தப் புயலானது இன்று பிற்பகல் மும்பையை அடுத்த அலிபாத் பகுதியில் கரையைக் கடக்கும் எனவும் அதிகாரிகள் தகவல் தெரிவித்து உள்ளனர். மேலும் புயலானது 100 கிலோ மீட்டர் முதல் 110 கிலோ மீட்டர் தொலைவில் கரையைக் கடக்க இருப்பதால் அதிதீவிர புயல் காற்று வீசும் எனவும் எதிர்பார்க்கப் படுகிறது.
மகாராஷ்டிரா, குஜராத் கடற்கரையை நோக்கி பயணிக்கும் இந்தப் புயலால் கடற்கரை ஓரங்களில் பாதிப்புகள் இருக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது. மும்பையைச் சுற்றி சுமார் 30 க்கும் மேற்பட்ட தேசிய பேரிடர் மீட்புக்குழுக்கள் தற்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். குஜராத் பகுதிகளில் நிலச்சரிவு போன்ற அபாயங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் அதிகாரிகள் கவலை தெரிவித்து உள்ளனர். குஜராத் சுற்றியுள்ள வல்சாத், நவ்சாரி போன்ற பகுதிகளில் உள்ள சுமார் 47 கிராமங்களில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப் பட்டுள்ளனர்.
மகாராஷ்டிராவில் இதுவரை 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து முதல்வர் உத்தவ்தாக்கரே, “நிசர்கா புயல் என்பது இதுவரை எப்போதும் மாநிலம் எதிர்ப்பார்க்காத அளவில் கடுமையான புயலாக மாறியிருக்கிறது. பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம்” என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் அம்மாநிலத்தில் தளர்த்தப்பட்ட ஊரடங்கு விதிமுறைகள் திரும்பப் பெறப்பட்டு இருக்கின்றன. பொதுமக்கள் வியாழக்கிழமை மதியம் வரை வெளியே வரவேண்டாம் என்றும் காவல் துறையினரும் அறிவுறுத்தி வருகின்றனர். மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப் பட்டு இருக்கிறார்கள். பூங்கா, கடற்கரை போன்ற பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என்றும் தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout