ஆர்யாவுடன் அனுஷ்கா நடித்ததால் கோடிக்கணக்கில் நஷ்டமான தயாரிப்பாளர்கள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஆர்யாவுடன் அனுஷ்கா நடித்த ’இஞ்சி இடுப்பழகி’ என்ற திரைப்படம் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியானது. இந்த படத்தின் கேரக்டருக்காக அனுஷ்கா தனது உடல் எடையை கிட்டத்தட்ட இரண்டு மடங்காக கூட்டினார். அந்த நேரத்தில் அவர் பாகுபலி மற்றும் 'பாகுபலி 2’ ஆகிய படங்களில் நடித்துக்கொண்டிருந்தார்.
‘இஞ்சி இடுப்பழகி’ படத்தை முடித்துவிட்டு மீண்டும் 'பாகுபலி 2’ படத்தின் படப்பிடிப்பிற்காக செல்லும்போது அவரால் தனது உடல் எடையை பழைய மாதிரி குறைக்க முடியவில்லை. ஒரு யோகா டீச்சராக இருந்தும் அவரால் இயக்குனர் சொன்ன உடல் எடை அளவுக்கு உடல் எடையை குறைக்க முடியவில்லை என்பதால் வேறு வழியின்றி பல கோடிகளை செலவு செய்து கிராபிக்ஸ் மூலம் அனுஷ்காவை ஒல்லியாக காட்டினார் இயக்குனர் ராஜமவுலி. இதனையடுத்து இன்று வரை அனுஷ்காவால் தனது உடல் எடையை குறைக்க முடியவில்லை.
இந்த நிலையில் சமீபத்தில் அவர் நடித்து முடித்துள்ள ’நிசப்தம்’ படத்திலும் அனுஷ்காவின் உடல் எடை பிரச்சனை தெரியவந்துள்ளது. இதனால் இந்த படத்தின் தயாரிப்பாளரும் சில கோடிகளை செலவு செய்து அனுஷ்காவின் உடல் எடையை கிராபிக்ஸ் மூலம் குறைத்து வருவதாக கூறப்படுகிறது. ஆர்யாவுடன் ஒரே ஒரு படத்தில் அனுஷ்கா நடித்ததால் இரண்டு தயாரிப்பாளர்களுக்கு கோடிக்கணக்கில் கூடுதல் செலவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout