பிக்பாஸ் வீட்டிற்குள் திடீரென வந்த நிரூப்பின் முன்னாள் காதலி: திடீர் திருப்பம்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது நடைபெற்று வரும் டாஸ்க்கில் போட்டியாளர்களின் உறவினர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள் என்பதைப் பார்த்து வருகிறோம். நேற்று அக்ஷரா மற்றும் சிபியின் உறவினர்கள் வந்த நிலையில் இன்று நிரூப் மற்றும் ராஜுவின் உறவினர்கள் வந்தார்கள் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் தற்போது திடீர் திருப்பமாக பிக்பாஸ் வீட்டிற்குள் நடிகை யாஷிகா ஆனந்த் வந்துள்ளார். அவர் நிரூப்பின் முன்னாள் காதலர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே யாஷிகா குறித்து பிக்பாஸ் வீட்டில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கூறிய நிரூப், ‘எனக்கு சினிமா தொழிலில் யாஷிகா தான் உதவி செய்தார் என்றும், ஒரு பெண்ணால் தான் நான் வளர்ந்தேன் என்பதை நான் பெருமையுடன் சொல்லிக் கொள்வேன் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் கார் விபத்து ஒன்றில் சிக்கி படுகாயமடைந்த யாஷிகா தற்போது குணமாகிய நிலையில் பிக்பாஸ் வீட்டிற்குள் அவர் வருகை தந்துள்ளார். அவரை போட்டியாளர்கள் மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எல்லோரும் நன்றாக விளையாடுகிறீர்கள் என்றும் வெளியே வந்தவுடன் உங்களது வாழ்க்கை தரம் உயரும் என்றும் யாஷிகா தெரிவித்தார். மேலும் நிரூப்பிடம் ’உன்னை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன் என்றும் நீ சரியாக விளையாடி வருகிறாய் என்றும் சந்தோசமாக இருங்கள் என்றும் தெரிவித்தார்.

மேலும் ’ராஜூ உங்களை கொஞ்ச நாளாக காணவில்லையே எங்கே இருக்கிறீர்கள் என்று யாஷிகா கேட்டதற்கு வழக்கம்போல் ’இருக்கின்றேன் மேடம்’ என்று தனது பாணியில் அவர் பதில் கூறியுள்ளது ரசிக்கத்தக்க வகையில் இருந்தது. இன்று யாஷிகாவின் வரவு இன்றைய நிகழ்ச்சியின் சுவாரஸ்யத்தை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.