அப்படி என்ன சொன்னார் நிரூப்? ஆவேசமாக கத்திய ஜூலி!

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் நிரூப் ஜூலியை ஆபாசமாக திட்டியதாகவும், அதனால் ஆவேசமாகிய ஜூலி நிரூப்பை திட்டும் வீடியோ வெளியானதை அடுத்து அப்படி என்னதான் சொன்னார் நிரூப் என்ற கேள்வி எழுந்துள்ளது.

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்த நிகழ்ச்சியில் கடந்த சில நாட்களாக எல்லை மீறி போட்டியாளர்கள் நடந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சி தரம் தாழ்ந்து கொண்டு செல்வதால் தான் கமல்ஹாசன் விலகி விட்டதாகவும் அதனை தொடர்ந்து வனிதாவும் வெளியேறிவிட்டதாக கூறப்பட்டு வரும் நிலையில் அது உண்மை என்பதை நிரூபிப்பது போல் தான் தற்போது போட்டியாளர்கள் நடந்துகொள்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஜூலியை நிரூப் ஆபாசமாக திட்டியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஒரு பெண் போட்டியாளர் என்று கூட பார்க்காமல் நிரூப் ஆபாசமாக திட்டியதும் அதற்கு ஆத்திரமடைந்து ஜூலி கத்திய வீடியோவும் தற்போது வைரலாகி வருகிறது.

இதனை அடுத்து சிம்பு, நிரூப் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நிரூப்பிற்கு ஆதரவாகப் பேசும் அனிதா சம்பத்தையும் வெளியேற்ற வேண்டும் என்றும் நெட்டிசன்கள் பதிவு செய்து வருகின்றனர்.

More News

இளையராஜாவுடன் முதல்முதலாக இணையும் தேவி ஸ்ரீ பிரசாத்!

இசைஞானி இளையராஜாவின் இசை நிகழ்ச்சி சென்னையில் மார்ச் 18ஆம் தேதி தீவு திடலில் நடைபெற உள்ளது என்பதும் இந்த நிகழ்ச்சிக்கான டிக்கெட் விற்பனை அமோகமாக நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

சமந்தா நடிக்க மறுத்த கேரக்டரில் நடிக்கின்றாரா அனுஷ்கா?

தமிழ் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையான சமந்தா நடிக்க மறுத்த கேரக்டரில் பிரபல நடிகை அனுஷ்கா ஷெட்டி நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக கூறப்படுகிறது .

ஐஸ்வர்யா ரஜினியின் 'பயணி': மியூசிக் ஆல்பம் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கடந்த சில நாட்களாக 'பயணி' என்ற மியூசிக் ஆல்பத்தை இயக்கி வந்தார் என்பதும் இது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில்

மெக்சிகோவில் 'செனோரிட்டா': த்ரிஷாவின் லேட்டஸ்ட் வீடியோ!

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வரும் த்ரிஷா சற்று முன்னர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது. 

விஜய்-பிரசாந்த் கிஷோர் சந்திப்பா? தமிழக அரசியலுக்கு ஸ்கெட்சா?

தளபதி விஜய்யை தேர்தல் வியூக மன்னன் பிரசாந்த் கிஷோர் சந்தித்ததாகவும் தமிழக அரசியல் குறித்து பேசியதாகவும் சமூக வலைதளங்களில் கசிந்து வரும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. .