அப்படி என்ன சொன்னார் நிரூப்? ஆவேசமாக கத்திய ஜூலி!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் நிரூப் ஜூலியை ஆபாசமாக திட்டியதாகவும், அதனால் ஆவேசமாகிய ஜூலி நிரூப்பை திட்டும் வீடியோ வெளியானதை அடுத்து அப்படி என்னதான் சொன்னார் நிரூப் என்ற கேள்வி எழுந்துள்ளது.
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்த நிகழ்ச்சியில் கடந்த சில நாட்களாக எல்லை மீறி போட்டியாளர்கள் நடந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சி தரம் தாழ்ந்து கொண்டு செல்வதால் தான் கமல்ஹாசன் விலகி விட்டதாகவும் அதனை தொடர்ந்து வனிதாவும் வெளியேறிவிட்டதாக கூறப்பட்டு வரும் நிலையில் அது உண்மை என்பதை நிரூபிப்பது போல் தான் தற்போது போட்டியாளர்கள் நடந்துகொள்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஜூலியை நிரூப் ஆபாசமாக திட்டியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஒரு பெண் போட்டியாளர் என்று கூட பார்க்காமல் நிரூப் ஆபாசமாக திட்டியதும் அதற்கு ஆத்திரமடைந்து ஜூலி கத்திய வீடியோவும் தற்போது வைரலாகி வருகிறது.
இதனை அடுத்து சிம்பு, நிரூப் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நிரூப்பிற்கு ஆதரவாகப் பேசும் அனிதா சம்பத்தையும் வெளியேற்ற வேண்டும் என்றும் நெட்டிசன்கள் பதிவு செய்து வருகின்றனர்.
Again this Manchild used the same word... @SilambarasanTR_ what is this ?@OfficialBalaji#BBUltimateTamil#BBUltimate#BalajiMurugadoss?? pic.twitter.com/fvK0DGT0iC
— Nivetha Yuvaraman (@NYuvaraman) March 16, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments