அஞ்சலியின் அடுத்த படத்தில் மணிரத்னம் அறிமுகம் செய்த நடிகை
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய்சேதுபதியுடன் அஞ்சலி நடித்த 'சிந்துபாத்' திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் அஞ்சலி தற்போது சீனுராமசாமி இயக்கும் படம், சமுத்திரக்கனி-சசிகுமாரின் படம் உள்பட ஒருசில படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் 'பலூன்' பட இயக்குனர் சினிஷ் தயாரிப்பில் கிருஷ்ணன் தேவராஜ் இயக்கத்தில் அஞ்சலி ஒரு காமெடி படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் அஞ்சலி, பேஸ்கட்பால் வீராங்கனை மற்றும் பயிற்சியாளர் கேரக்டரில் நடிக்கவுள்ளதாகவும், இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும் வரும் செப்டம்பர் முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் செய்திகள் வெளிவந்துள்ளது.
இந்த நிலையில் நடிகை நிரோஷா இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளார். மணிரத்னம் இயக்கிய 'அக்னி நட்சத்திரம்' படத்தில் அறிமுகமான நிரோஷா அதன்பின் கமல்ஹாசனுடன் 'சூரசம்ஹாரம்', விஜயகாந்துடன் 'செந்தூரப்பூவே,' கார்த்திக்குடன் 'பாண்டி நாட்டு தங்கம்' உள்பட பல திரைப்படங்களில் நாயகியாக நடித்துள்ளார். சமீபத்தில் அவர் சூர்யாவின் 'தானா சேர்ந்த கூட்டம் படத்தில் ஒரு சிறு கேரக்டரில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அஞ்சலி, யோகிபாபு, ராமர், நிரோஷா உள்பட பலர் நடிக்கவுள்ள இந்த படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைக்கவுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout