அபிராமி இடுப்பை கிள்ளுரான் பாலா: வனிதாவிடம் புலம்பிய நிரூப்
Send us your feedback to audioarticles@vaarta.com
அபிராமியின் இடுப்பை கிள்ளியதாக வனிதாவிடம் நிரூப் புலம்பிய வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இந்த நிகழ்ச்சியில் முன்னாள் காதலர்களான நிரூப் மற்றும் அபிராமி ஆகியோர் போட்டியாளர்களாக உள்ளனர். காதலித்து பிரிந்தவர்கள் போட்டியாளர்களாக ஒரே நிகழ்ச்சியில் இருப்பதால் மீண்டும் இணைய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் இருவரும் தங்களுடைய பிரிவில் உறுதியாக உள்ளனர் என்பது அவர்களுடைய பேச்சில் இருந்து தெரிய வந்தது.
இந்த நிலையில் அபிராமி பாலாவுடன் நெருக்கமாக இருப்பதாக போட்டியாளர்கள் மத்தியில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து நிரூப் வனிதாவிடம், தன்னுடைய முன்னாள் காதலியாக இருந்த அபிராமியை என் கண்முன்னே பாலா இடுப்பை கிள்ளுகிறான் எறும், இதை பார்த்து எனக்கு மிகவும் சங்கடமாக இருக்கிறது என புலம்பினார். வனிதாவும் அவருக்கு ஆதரவாக பேசுகிறார்.
ஆனால் இது குறித்து தாமரையிடம் விளக்கமளித்த பாலா, ‘ஒரு விஷயத்தை முழுதாக தெரியாமல் பேசக்கூடாது என்றும், வனிதா ஒரு பெண்ணாக இருந்து கொண்டு இப்படி பேசலாமா? என்றும், நட்புக்கும் காதலுக்கும் வித்தியாசம் தெரியாமல் இருக்கிறார்கள் என்றும் கூறினார். மேலும் அபிராமியின் எதிர்காலம் கருதியே நான் இது குறித்து பேசாமல் இருக்கிறேன் என்று தாமரையிடம் பாலாஜி விளக்கமளிக்கும் வீடியோவும் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
#BiggBossTamil #BBUltimate #balaji#thamarai #Niroop பாலக்கு ஹாஸ்டக் போடுற பாதி பெரு fack ID தான் , உண்மையா ஒருவன் தன் நண்பனின் ex- ஐ அவன் கன் முன்னாடி இப்படி பண்ணுறதுலமம் கேவலமான செயல் , அவனுடைய மனம் படும் வருத்தத்தை யோசிக்க வேண்டும் . pic.twitter.com/wag0ZkD94u
— kalaivanan (@kalaishreya) February 19, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments