நிர்மலா சீதாராமன் பாராளுமன்றத்தில் கூறிய புறநானூறு பாடலும் அதன் விளக்கமும்

  • IndiaGlitz, [Friday,July 05 2019]

இன்று மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புறநானூற்று பாடல் ஒன்றை தமிழில் வாசித்தார். ஒரு அரசன் எப்படி வரி விதிக்க வேண்டும், சரியானபடி வரி விதித்தால் என்ன நன்மைகள் உண்டாகும், தவறாக வரி விதித்தால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பது அந்த புறநானூற்று பாடலில் பிசிராந்தையார் கூறியுள்ளார்.

இந்த பாடலை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பாராளுமன்றத்தில் படித்தது தமிழுக்கு பெருமை மட்டுமின்றி பட்ஜெட் தினத்தில் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு அருமையான கருத்து ஆகும். பிசிராந்தையார் என்ற புலவர், பாண்டிய மன்னன் அறிவுடைய நம்பிக்கு அறிவுரை கூறிய அந்த பாடல் இதோ:

பாடல்:

காய்நெல் அறுத்துக் கவளங் கொளினே
மாநிறைவு இல்லதும் பன்னாட்கு ஆகும்;
நூறுசெறு ஆயினும் தமித்துப்புக்கு உணினே
வாய்புகு வதனினும் கால்பெரிது கெடுக்கும்;
5 அறிவுடை வேந்தன் நெறியறிந்து கொளினே
கோடி யாத்து நாடுபெரிது நந்தும்;
மெல்லியன் கிழவன் ஆகி வைகலும்
வரிசை அறியாக் கல்லென் சுற்றமொடு
பரிவுதப எடுக்கும் பிண்டம் நச்சின்
10 யானை புக்க புலம்போலத்
தானும் உண்ணான் உலகமும் கெடுமே

விளக்கம்:

விளைந்த நெல்லை அறுத்து உணவுக் கவளங்களாக்கி யானைக்குக் கொடுத்தால், ஒருமா அளவுகூட இல்லாத நிலத்தில் விளைந்த நெல்கூட பல நாட்களுக்கு யானைக்கு உணவாகும். ஆனால், நூறு வயல்கள் இருந்தாலும், யானை தானே புகுந்து உண்ண ஆரம்பித்தால் , யானை தின்பதைவிட யானையின் கால்களால் மிதிபட்டு அழிந்த நெல்லின் அளவு அதிகமாகும். அதேபோல் அறிவுடைய அரசன் வரி திரட்டும் முறை தெரிந்து மக்களிடமிருந்து வரி திரட்டினால் நாடு கோடிக் கணக்கில் பொருள்களைப் பெற்றுத் தழைக்கும். அரசன் அறிவில் குறைந்தவனாகி, முறை அறியாத சுற்றத்தாரோடு ஆரவாரமாக அன்பு கெடுமாறு, நாள்தோறும் வரியைத் திரட்ட விரும்பினால், யானை புகுந்த நிலம் போலத் தானும் பயனடையாமல் தன்னுடைய நாடும் கெடும்.

இந்த புறநானூறு பாடலையும் அதற்கான விளக்கத்தையும் ஆங்கிலத்தில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் சொல்லி முடித்ததும் பலத்த கைதட்டல் ஒலித்தது

More News

திடீரென உடைந்த கூட்டணி: அபிராமிக்கு ஆப்பு வைத்த வனிதா!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒருசில நாட்களில் இரண்டு குரூப்புகள் பிரிந்து ஒன்றுடன் ஒன்று மோதிக்கொள்வது என்பது வழக்கமான ஒன்றுதான். கடந்த இரண்டு நிகழ்ச்சிகளிலும் அதுதான் நடந்தது

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் மத்திய பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்

சுதந்திர இந்தியாவின் முதல் பெண் நிதியமைச்சராக பொறுப்பேற்றுள்ள தமிழரான நிர்மலா சீதாராமன் இன்று பாராளுமன்றத்தில் இந்த நிதியாண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார்.

தேசத்துரோக வழக்கு: வைகோவுக்கு ஒராண்டு சிறை

வைகோ மீது பதிவு செய்யப்பட்டிருந்த தேசத்துரோக வழக்கின் தீர்ப்பு சற்றுமுன் வெளியான நிலையில் இந்த வழக்கில் வைகோ குற்றவாளி என தீர்ப்பு அளித்த நீதிமன்றம்

சமுத்திரக்கனியின் அடுத்த படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

இயக்குனர் மற்றும் குணசித்திர நடிகர் சமுத்திரக்கனி நடித்த 'கென்னடி கிளப்', 'ஆர்.ஆர்.ஆர்', சில்லுக்கருப்பட்டி', 'அடுத்த சாட்டை', 'வெள்ளைய் யானை', உள்பட ஒருசில திரைப்படங்கள் ரிலீசுக்கு

நீதான் என் காதலி; காதலை ஓப்பனாக சொன்ன கவின்

ஒவ்வொரு பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் ஒரு காதல் ஜோடி உருவாகி வருவதை போல் இந்த மூன்றாம் பாகத்திலும் ஒரு காதல் ஜோடி உருவாகியுள்ளது.