நிர்மலா சீதாராமன் பாராளுமன்றத்தில் கூறிய புறநானூறு பாடலும் அதன் விளக்கமும்
Send us your feedback to audioarticles@vaarta.com
இன்று மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புறநானூற்று பாடல் ஒன்றை தமிழில் வாசித்தார். ஒரு அரசன் எப்படி வரி விதிக்க வேண்டும், சரியானபடி வரி விதித்தால் என்ன நன்மைகள் உண்டாகும், தவறாக வரி விதித்தால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பது அந்த புறநானூற்று பாடலில் பிசிராந்தையார் கூறியுள்ளார்.
இந்த பாடலை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பாராளுமன்றத்தில் படித்தது தமிழுக்கு பெருமை மட்டுமின்றி பட்ஜெட் தினத்தில் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு அருமையான கருத்து ஆகும். பிசிராந்தையார் என்ற புலவர், பாண்டிய மன்னன் அறிவுடைய நம்பிக்கு அறிவுரை கூறிய அந்த பாடல் இதோ:
பாடல்:
காய்நெல் அறுத்துக் கவளங் கொளினே
மாநிறைவு இல்லதும் பன்னாட்கு ஆகும்;
நூறுசெறு ஆயினும் தமித்துப்புக்கு உணினே
வாய்புகு வதனினும் கால்பெரிது கெடுக்கும்;
5 அறிவுடை வேந்தன் நெறியறிந்து கொளினே
கோடி யாத்து நாடுபெரிது நந்தும்;
மெல்லியன் கிழவன் ஆகி வைகலும்
வரிசை அறியாக் கல்லென் சுற்றமொடு
பரிவுதப எடுக்கும் பிண்டம் நச்சின்
10 யானை புக்க புலம்போலத்
தானும் உண்ணான் உலகமும் கெடுமே
விளக்கம்:
விளைந்த நெல்லை அறுத்து உணவுக் கவளங்களாக்கி யானைக்குக் கொடுத்தால், ஒருமா அளவுகூட இல்லாத நிலத்தில் விளைந்த நெல்கூட பல நாட்களுக்கு யானைக்கு உணவாகும். ஆனால், நூறு வயல்கள் இருந்தாலும், யானை தானே புகுந்து உண்ண ஆரம்பித்தால் , யானை தின்பதைவிட யானையின் கால்களால் மிதிபட்டு அழிந்த நெல்லின் அளவு அதிகமாகும். அதேபோல் அறிவுடைய அரசன் வரி திரட்டும் முறை தெரிந்து மக்களிடமிருந்து வரி திரட்டினால் நாடு கோடிக் கணக்கில் பொருள்களைப் பெற்றுத் தழைக்கும். அரசன் அறிவில் குறைந்தவனாகி, முறை அறியாத சுற்றத்தாரோடு ஆரவாரமாக அன்பு கெடுமாறு, நாள்தோறும் வரியைத் திரட்ட விரும்பினால், யானை புகுந்த நிலம் போலத் தானும் பயனடையாமல் தன்னுடைய நாடும் கெடும்.
இந்த புறநானூறு பாடலையும் அதற்கான விளக்கத்தையும் ஆங்கிலத்தில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் சொல்லி முடித்ததும் பலத்த கைதட்டல் ஒலித்தது
Government keeps "Gaon, Garib and Kisan" at the centre of everything we do, of every programme : Union FM #NirmalaSitharaman #Budget2019 #BudgetForNewIndia pic.twitter.com/zsf31csLyV
— PIB India (@PIB_India) July 5, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout