நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் மத்திய பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்

  • IndiaGlitz, [Friday,July 05 2019]

சுதந்திர இந்தியாவின் முதல் பெண் நிதியமைச்சராக பொறுப்பேற்றுள்ள தமிழரான நிர்மலா சீதாராமன் இன்று பாராளுமன்றத்தில் இந்த நிதியாண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார். அவர் தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் பின்வருவன:

சிறு மற்றும் குறு தொழில்களில் வேலைவாய்ப்பை அதிகரிப்பதுதான் தற்போது எடுக்கப்பட்டுள்ள முதல் இலக்கு

மின்சாரத்தில் இயங்கக்கூடிய வாகனங்களுக்கு கூடுதல் சலுகைகள் வழங்கப்படும். மின்சார வாகனங்களை ஊக்குவிக்க 3 ஆண்டுகளுக்கு ரூ 10 ஆயிரம் கோடி முதலீடு

பாரத்மாலா மற்றும் சாகர்மாலா ஆகிய திட்டங்கள் மூலம் போக்குவரத்து துறை உட்கட்டமைப்பு மேம்படுத்தப்படுகிறது

2030ம் ஆண்டு வரை ரயில்வே கட்டுமானத்துக்கு ரூ.50 லட்சம் கோடி தேவைப்படுகிறது

நீர்வழிப்பாதைகளை உருவாக்குவதன் மூலம், சாலை போக்குவரத்து மற்றும் ரயில் போக்குவரத்து நெரிசலை குறைக்க முடியும்

ரயில், பஸ் என எல்லாவற்றுக்கும் ஒரே அட்டை அறிமுகப்படுத்தப்படும்

ஒரே நாடு ஒரே மின்சார விநியோக அமைப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்படும்

அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான ஓய்வூதிய திட்டம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி முழுமையாக செயல்படுத்தப்படும்

நாடு முழுவதும் 1.95 கோடி வீடுகள் கட்டி உரிய பயனாளிகளுக்கு வழங்கப்படும்

வருடத்திற்கு ரூ.1.2 கோடி வர்த்தகம் மேற்கொள்ளூம் வணிகர்கள் 3 கோடி பேருக்கு ஓய்வூதிய திட்டம்

ஆண்டுதோறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்த திட்டம்

விமான போக்குவரத்து துறை மற்றும் ஊடகம் ஆகிய துறைகளிலும் அந்நிய முதலீடு ஊக்குவிக்கப்படும்

1.95 கோடி வீடுகள் 2022ம் ஆண்டுக்குள் ஏழைகளுக்கு வழங்கப்படும். இதன் மூலம், வீடற்றவர்கள் இல்லாத நிலை உருவாக்கப்படும்