ரூ.7 லட்சம் வரை வருமான வரி இல்லை.. நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் உள்ள முக்கிய அம்சங்கள்!

  • IndiaGlitz, [Wednesday,February 01 2023]

7 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்களுக்கு வருமான வரி கிடையாது என்றும், ஆண்டு வருமானம் ரூ.7 லட்சம் வரை வருமானம் உள்ளவர்கள் வருமான வரி செலுத்த வேண்டிய அவசியம் இல்லை என்றும் இன்றைய பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருமான வரி உச்சவரம்பு ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.7 லட்சமாக அதிகரித்துள்ளதால் வரி செலுத்துவோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் தனி நபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி

ரூ.0-3 லட்சம் வருமானம் - வரி இல்லை.

ரூ.3 லட்சத்துக்கு மேல் மற்றும் ரூ5 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு 5 சதவீதம் வரி

ரூ.6 லட்சம் மற்றும் ரூ.9 லட்சம் வரை வருமானம் இருந்தால் 10 சதவீதம் வரி

ரூ.12 லட்சத்துக்கு மேல் மற்றும் ரூ.15 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு 20 சதவீதம் வரி

15 லட்சத்துக்கு மேல் வருமானம் இருந்தால் 30 சதவீதம் வரி

இந்த நிலையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் உள்ள முக்கிய அம்சங்களை பார்ப்போம்

தங்கம், வெள்ளி, வைரம் ஆகியவற்றுக்கு இறக்குமதி வரி உயர்வு

சைக்கிள், பொம்மை ஆகியவற்றுக்கு இறக்குமதி வரி குறைவு

5 சதவீத வட்டியில் பெண்களுக்கான சேமிப்புத் திட்டம்

செல்போன் மற்றும் தொலைக்காட்சி உதிரி பாகங்களுக்கான இறக்குமதி வரி குறைக்கப்பட்டுள்ளது

சிகரெட்களுக்கு கூடுதலாக 16% வரி விதிப்பு

மருத்துவ துறையில் ஆய்வுகளை ஊக்குவிப்பதற்கு புதிய திட்டங்கள் உருவாக்கப்படும்
தேசிய டிஜிட்டல் நூலகம் மேம்படுத்தப்படும்.

நாடு முழுவதும் பிராந்திய மற்றும் ஆங்கில மொழிகளில் டிஜிட்டல் நூலகங்கள் அமைக்கப்படும்

பழங்குடியின மக்கள் வசிக்கும் ஏகலைவா மாதிரிப் பள்ளிகளில் அடுத்த 3 ஆண்டுகளில் 38 ஆயிரம் புதிய ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள்.

ஏகலைவா பள்ளியில் ஆசிரியர்கள் நியமனம் மூலம் 3.5 லட்சம் பழங்குடியின மாணவர்கள் பயனடைவார்கள்.

ரூபாய் 700 கோடி ரூபாய் மதிப்பில் ஆன்லைன் நீதிமன்றங்கள் உருவாக்கப்படும்.

போக்குவரத்து திட்டங்களை நிறைவேற்ற ரூபாய் 75 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு

நாடு முழுவதும் 3 செயற்கை நுண்ணறிவு ஆய்வு மையங்கள் அமைக்கப்படும்

சிறு, குறு, தொழில் நிறுவனங்களுக்கான தனி டிஜிலாக்கர் முறை உருவாக்கப்படும்.

அரசு ஊழியர்கள் தங்களது திறனை வளர்த்துக் கொள்வதற்காக இணையதளம் மூலம் கற்பிக்கும் கர்மயோகி திட்டம்

நகர்ப்புற வளர்ச்சிக்கு ரூபாய் 10 ஆயிரம் கோடி ஒதுக்கீடு

கழிவு நீர் அகற்றும் பணியில் மனிதர்களை பயன்படுத்துவதற்கு பதில் 100 சதவீத இயந்திரங்களை பயன்படுத்த முடிவு

ஆதார் கார்டு, பான் கார்டு, டிஜி லாக்கர் ஆகியவற்றிற்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
5ஜி மொபைல் செயலி உருவாக்க 100 ஆய்வகங்கள் உருவாக்கப்படும்.

ரசாயன உர பயன்பாட்டை குறைக்க கோவர்த்தன திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது.

மாசு ஏற்படுத்தும் பழைய வாகனங்கள் அகற்றும் திட்டத்திற்கு கூடுதல் நிதி

அடுத்த 3 ஆண்டுகளில் 47 லட்சம் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
பசுமை எரிசக்தி நடைமுறைக்கு ரூபாய் 35 ஆயிரம் கோடி ஒதுக்கீடு

சிறு, குறு நடுத்தர தொழில்களுக்கு கடன் வழங்க ரூபாய் 9 ஆயிரம் கோடி ஒதுக்கீடு

சிறு, குறு தொழில்களுக்கான கடன் வட்டி 1 சதவீதமாக குறைக்க நடவடிக்கை

அடுத்த ஓராண்டுக்கு 80 கோடி குடும்பங்களுக்கு இலவச உணவு தானியங்களை மத்திய அரசு வழங்கும்

பெண்கள், பட்டியலின, பழங்குடியின, இளைஞர்கள் நலனை கருத்தில் கொண்டு பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.

உணவு தானிய விநியோகத்திற்கு 2 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 157 புதிய நர்சிங் கல்லூரிகள் உருவாக்கப்படும்.

More News

இப்படி எந்த நடிகையாவது செய்ய முடியுமா? வேற லெவல் வொர்க்-அவுட் வீடியோ!

தமிழ் திரை உலகின் நடிகை ஒருவர் வேற லெவலில் வொர்க்-அவுட் செய்யும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள நிலையில் இது மாதிரி இன்றைய நடிகைகள் யாராவது வொர்க்-அவுட் செய்ய

திருமணமான 2 மாதத்தில் கர்ப்பம்.. சூர்யா பட நடிகையின் வளைகாப்பு புகைப்படங்கள்..!

சூர்யா படத்தில் நடித்த நடிகைக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் திருமணமான நிலையில் இரண்டே மாதத்தில் கர்ப்பமானார். இந்த நிலையில் அவரது வளைகாப்பு நிகழ்ச்சி தற்போது நடந்துள்ள நிலையில்

நடிகர் விமலின் மனைவி டாக்டரா? வைரலாகும் திருமண புகைப்படங்கள்

 தமிழ் திரை உலகின் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவரான விமலின் மனைவி ஒரு டாக்டர் என தற்போது தெரியவந்துள்ளதை அடுத்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

'தளபதி 67' படத்தில் இணைந்த 8 பிரபலங்கள்.. இன்றும் தொடரும் அப்டேட்கள்..!

 தளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 67' படத்தின் அப்டேட்டுகள் நேற்று மாலை முதல் ஒரு மணி நேரத்திற்கு ஒரு அப்டேட் வந்தது என்பதும் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் குறித்த தகவல் வெளியானது

தனது நண்பருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த விஜய் டிவி பிரியங்கா.. யார் இவர்?

 விஜய் டிவி பிரியங்கா தனது நண்பரை கட்டிப்பிடித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ள புகைப்படத்தை பகிர்ந்துள்ள நிலையில் அந்த புகைப்படத்திற்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.