சி.ஆர்.சரஸ்வதி, வளர்மதி ஆகியோர் அரசியல் வியாதிகள். நிர்மலா பெரியசாமி ஆவேச பேட்டி
- IndiaGlitz, [Tuesday,March 21 2017]
அதிமுக நட்சத்திர பேச்சாளர்கள் கூட்டத்தில் நிர்மலா பெரியசாமி மற்றும் வளர்மதி, சி.ஆர்.சரஸ்வதி இடையே ஏற்பட்ட சர்ச்சைகள் குறித்து சில மணி நேரங்களுக்கு முன் பார்த்தோம். சசிகலா அதிமுக அணியில் இருந்து கொண்டு ஓபிஎஸ் குறித்து புகழ்ந்து பேசி சேம் சைடு கோல்போட்ட நிர்மலாவுக்கும் சசிகலா அணியின் அதிமுக தரப்புக்கும் காரசாரமாக நடந்த விவாதத்தின் காரணமாக நிர்மலா அந்த கூட்டத்தில் இருந்து வெளியேறினார்.
இந்நிலையில் இன்று மாலை நிர்மலா பெரியசாமி, முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் அவர்களை சந்தித்து தனது ஆதரவை தெரிவிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்நிலையில் இன்று காலை நடந்த சம்பவம் குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த நிர்மலா பெரியசாமி கூறியதாவது:
நான் எப்படியும் இரு அணிகளும் ஒன்றுபட்டுவிடும் என்று காத்திருந்தேன். அம்மாவின் கட்சியை விட்டு வெளியே போகவிருப்பப்படவில்லை என்பதால் யோசித்துக்கொண்டிருந்தேன். என் மனதில் ஊசலாடிக்கொண்டிருந்த எண்ணத்தை இப்போது எடுக்க இறைவன் வழிகாட்டிவிட்டார்.
அதிமுக ஆலோசனை கூட்டத்தில், நான் அமைதியாக பேசிக்கொண்டிருந்தபோது, சி.ஆர்.சரஸ்வதி, குண்டுகல்யாணம் ஆகியோர், அதில் குறுக்கிட்டனர். ஓ.பி.எஸ் அண்ணன் நமக்கு எதிரியா என நான் கேட்டதை மட்டும் எடுத்துக்கொண்டு, அவர்கள் என்னை விமர்சனம் செய்தனர்.
ஓ.பி.எஸ் எதிரி இல்லை என்றால், நீங்கள் ஏன் கட்சியில் இருக்க வேண்டும் என்று என்னை கேட்டார். நீங்கள் யார் என்னைகட்சியை விட்டு வெளியேற சொல்ல என நான் கேட்டேன். அதற்குள், வளர்மதி வந்து என்னை அடக்க பார்த்தார். சொந்த தொகுதியில் மக்களால் விரட்டப்பட்ட வளர்மதி என்னை அடக்க முயல என்ன தகுதியுள்ளது? சி.ஆர்.சரஸ்வதி, வளர்மதி ஆகியோர் அரசியல் வியாதி போன்றவர்கள்.