மும்பை ஆசிரமத்தில் ஒரு மாதம் இருந்தாரா நிர்மலாதேவி?
Send us your feedback to audioarticles@vaarta.com
கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்ல முயன்றதாக கைது செய்யப்பட்டு விசாரணையில் இருக்கும் நிர்மலாதேவி, கடந்த சில வருடங்களுக்கு முன்னர் மும்பையில் உள்ள ஆசிரமம் ஒன்றில் ஒரு மாதத்திற்கும் மேலாக தங்கியிருந்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவிக்கும் அவரது கணவர் சரவண பாண்டியன் என்பவருக்கும் இடையே அடிக்கடி கருத்துவேறுபாடு ஏற்பட்டது உண்டாம். இந்த நிலையில் நிர்மலாதேவியை அவரது கணவர் விவாகரத்து செய்ய முயன்றபோது அவர் தற்கொலை செய்துகொள்வதாக கணவரை மிரட்டியுள்ளதாகவும் தெரிகிறது.
மேலும் கடந்த ஆண்டு திடீரென ஒரு மாதம் நிர்மலாதேவி காணாமல் போய்விட்டதாகவும், அவரை உறவினர்கள் தேடி அலைந்தபோது அவர் மும்பையில் உள்ள ஆசிரமம் ஒன்றில் இருந்ததாக தற்போது தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் தற்போது நிர்மலாதேவி பெரும் சர்ச்சையில் சிக்கியிருப்பதை அடுத்து மீண்டும் அவரது கணவர் விவாகரத்து மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com