வெளியானது நிர்மலாதேவியின் புதிய வாட்ஸ் அப் வீடியோ

  • IndiaGlitz, [Thursday,April 19 2018]

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து சென்றதாக அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலாதேவி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது தெரிந்ததே. இந்த விஷயத்தில் அவரை சிக்க வைத்தது ஒரு ஆடியோ. இந்த ஆடியோவில் அவர் மாணவிகளை மூளைச்சலவை செய்தது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாகியது

இந்த நிலையில் தற்போது நிர்மலாதேவியின் புதிய வாட்ஸ் அப் வீடியோ ஒன்று வெளியாகி இந்த வழக்கில் மேலும் பல திருப்பங்களை ஏற்பட செய்துள்ளது. மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு தான் செல்வதாக அந்த வாட்ஸ் அப்பில் கூறிய நிர்மலாதேவி நாம் ஒரு குழுவாக செயல்பட வேண்டும் என்றும், எதுவாக இருந்தாலும் வெளிப்படையாக சொல்லுங்கள் என்று ஆரம்பிக்கின்றார்.

பின்னர் வெற்றிக்கு திறமை மட்டும் போதாது, உடல்ரீதியான, மனரீதியான புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும் என்று கூறியுள்ள நிர்மலாதேவி, நான் என்ன சொல்ல வருகிறேன் என்பது உங்களுக்கு புரியும் என்றும், இது உங்களுக்கான ஒரு சிறந்த வாய்ப்பு என்றும் கூறியுள்ளார்.

பின்னர் இதற்கு விருப்பம் என்றால் குட்மார்னிங், குட் ஈவினிங் என்று மேசேஜ் அனுப்பி உறுதி செய்து கொள்ளவும் என்றும், விருப்பம் இல்லை என்றால் ஒரு மிகபெரிய வாய்ப்பை நீங்கள் இழக்கின்றீர்கள் என்றும் அவர் மாணவிகளை மூளைச்சலவை செய்துள்ளார்

எனக்கும் இரண்டு பெண் குழந்தைகள் இருப்பதால் நான் எல்லாவற்றையும் யோசித்துதான் இதை சொல்கிறேன் என்றும், இதற்கு ஒப்புக்கொண்டால் படிப்பில் மட்டுமின்றி பொருளாதார ரீதியிலும் உங்களுக்கு பெரிய நன்மை கிடைக்கும் என்று அவர் மேலும் கூறியுள்ளார்

இந்த தகவலை ரகசியமாக வைத்து கொள்வது மட்டுமின்றி மற்ற மாணவிகளுக்கும் ரகசியமாக இந்த தகவலை பகிரும்படியும் அவர் அறிவுறுத்தியுள்ளார். 

இதற்கு பதில் அளித்த ஒரு மாணவி இதுபோன்ற ஒன்றை உங்களிடம் இருந்து நான் எதிர்பார்க்கவில்லை. எங்கள் குடும்பத்திற்கு இது செட் ஆகாது என்று கூறியுள்ளார். ஆனாலும் விடாமல் 'அதிர்ஷ்டம் எப்போதாவதுதான் உங்கள் கதவை தட்டும் என்று மீண்டும் மூளைச்சலவை செய்கிறார். மேலும் ஒரு மாணவி கொஞ்சம் கடுமையான சொற்களில் நிர்மலாதேவியை எச்சரிக்கின்றார்.

நானும் ஒரு காலத்தில் உங்களை போல் தான் பதில் கூறினேன். ஆனால் அதன் பின்னர் அந்த பாதைதான் சரி என்று எனக்கு பட்டது. உங்களுக்கு விருப்பம் இல்லை என்றால் விட்டுவிடுங்கள், அவர்கள் வேறு ஆளை பார்த்து கொள்வார்கள் என்று அந்த வாட்ஸ் அப் உரையாடலை முடிக்கின்றார் நிர்மலாதேவி.