நிர்மலாதேவி விவகாரம்: தலைமறைவாக இருந்த பேராசிரியர் கைது

  • IndiaGlitz, [Monday,April 23 2018]

அருப்புக்கோட்டை கல்லூரி ஒன்றில் மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்ல முயன்ற நிர்மலாதேவியின் வழக்கை சிபிசிஐ போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இந்த நிலையில் நிர்மலாதேவிக்கு உதவி செய்ததாக பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி படிப்பு மாணவன் கருப்பசாமி ஆகிய இருவர் மீது சிபிசிஐடி போலீசார் சந்தேகம் அடைந்தனர்.

இந்த நிலையில் பேராசிரியர் முருகன் மற்றும் மாணவன் கருப்பசாமி ஆகியோர் தலைமறைவானதால் இருவரையும் பிடிக்க 4 தனிப்படைகளை சிபிசிஐடி போலீசார் அமைத்தனர். இந்த தனிப்படைகள் இருவருக்கும் வலைவீசி தேடி வந்த நிலையில் சற்றுமுன் பேராசிரியர் முருகன் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

மதுரை காமராஜர் பல்கலையில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து கொண்டிருக்கும் இவர் இன்று வருகை பதிவேட்டில் கையெழுத்திட வந்தபோது போலீசார் அவரை கைது செய்துள்ளதாக தெரிகிறது. மேலும் தலைமறைவாகியுள்ள கருப்பசாமியை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

More News

'மெர்க்குரி' சென்னை ஓப்பனிங் வசூல் எப்படி?

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பிரபுதேவா, இந்துஜா மற்றும் பலர் நடித்த 'மெர்க்குரி' திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது.

தங்கமெடல் வாங்கிய தமிழருக்கு நேரில் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்

காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் சதீஷ்குமார் சிவலிங்கம் என்ற தமிழர் 77 கிலோ பளுதூக்குதல் பிரிவில்  தங்கப்பதக்கம் வென்று இந்தியாவுக்கே பெருமை சேர்த்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். 

விஜய்சேதுபதியுடன் மீண்டும் ஜோடி சேரும் அஞ்சலி

நடிகர் விஜய்சேதுபதியுடன் அஞ்சலி நடித்த 'இறைவி' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது மீண்டும் ஒரு படத்திற்காக இந்த வெற்றி ஜோடி இணைந்துள்ளது

'மெர்க்குரி' படக்குழுவினர்களுக்கு கிடைத்த சர்ப்ரைஸ் பாராட்டு

வேலைநிறுத்தத்திற்கு பின்னர் கடந்த வெள்ளியன்று ரிலீஸ் ஆன திரைப்படம் கார்த்திக் சுப்புராஜின் 'மெர்க்குரி. வசனமே இல்லாமல் மெளனமொழி த்ரில் திரைப்படமான இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

விஷாலின் 'இரும்புத்திரை' ரிலீஸ் தேதி அறிவிப்பு

கோலிவுட் திரையுலகின் வேலைநிறுத்தம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புதிய படங்களில் ரிலீஸ், கடந்த வெள்ளி முதல் தொடங்கியது.