நிர்மலாதேவி விவகாரம்: தலைமறைவாக இருந்த பேராசிரியர் கைது
- IndiaGlitz, [Monday,April 23 2018]
அருப்புக்கோட்டை கல்லூரி ஒன்றில் மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்ல முயன்ற நிர்மலாதேவியின் வழக்கை சிபிசிஐ போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இந்த நிலையில் நிர்மலாதேவிக்கு உதவி செய்ததாக பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி படிப்பு மாணவன் கருப்பசாமி ஆகிய இருவர் மீது சிபிசிஐடி போலீசார் சந்தேகம் அடைந்தனர்.
இந்த நிலையில் பேராசிரியர் முருகன் மற்றும் மாணவன் கருப்பசாமி ஆகியோர் தலைமறைவானதால் இருவரையும் பிடிக்க 4 தனிப்படைகளை சிபிசிஐடி போலீசார் அமைத்தனர். இந்த தனிப்படைகள் இருவருக்கும் வலைவீசி தேடி வந்த நிலையில் சற்றுமுன் பேராசிரியர் முருகன் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது
மதுரை காமராஜர் பல்கலையில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து கொண்டிருக்கும் இவர் இன்று வருகை பதிவேட்டில் கையெழுத்திட வந்தபோது போலீசார் அவரை கைது செய்துள்ளதாக தெரிகிறது. மேலும் தலைமறைவாகியுள்ள கருப்பசாமியை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.