நிர்மலாதேவியை நான் நேரில் கூட பார்த்ததில்லை: கவர்னர் பேட்டி

  • IndiaGlitz, [Tuesday,April 17 2018]

தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு நாட்களாக பேராசிரியை நிர்மலாதேவி விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி ஒன்றில் கணித பேராசிரியையாக பணிபுரிந்து வந்த நிர்மலாதேவி அந்த கல்லூரில் படித்து வரும் நான்கு மாணவிகளை தவறான பாதையில் வழிநடத்த முயற்சி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு பின்னர் கைது செய்யப்பட்டார். அவர் மீது போலீசார் மூன்று வழக்குகளை பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில் நிர்மலாதேவி விவகாரத்தில் கவர்னர் சம்பந்தப்பட்டிருப்பதாக ஒருசில அரசியல் தலைவர்கள் குற்றஞ்சாட்டினர். இந்த விவகாரத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு இருக்கும் நிலையில் கவர்னர் திடீரென விசாரணை கமிஷன் அமைத்தது ஏன்? என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட பல அரசியல் தலைவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் இந்த வழக்கை சிபிஐ விசாரணை செய்ய வேண்டும் என்ற குரலும் எதிர்க்கட்சிகள் தரப்பில் இருந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளிக்கும் வகையில் தற்போது தமிழக ஆளுனர் பன்வாரிலால் புரோஹித் செய்தியாளர்களை சந்தித்து வருகிறார். ஆளுனருக்கான வழிகாட்டி புத்தகத்தை முதலில் செய்தியாளர்களிடம் காண்பித்த கவர்னர், அதன்படி தான் பணிபுரிந்து வருவதாக கூறினார். மேலும் நிர்மலாதேவி என்பவர் யாரென்றே தனக்கு தெரியாது என்றும் அவரை நேரில் நான் பார்த்ததே இல்லை என்றும் கூறினார். இந்த வழக்கில் காவல்துறை தங்களது பணியை செய்யட்டும் என்றும் பல்கலைக்கழக வேந்தர் என்ற முறையில் தான் கமிஷன் அமைத்துள்ளதாகவும் தெரிவித்தார். இந்த வழக்கை சந்தானம் தலைமையிலான கமிஷன் முழுமையாக விசாரணை செய்து அறிக்கை அளிக்கும் என்றும் அந்த அறிக்கை வந்தவுடன் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றுவது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

More News

ஆசிபா கொடுமை குறித்து விஜய்சேதுபதி கூறியது என்ன தெரியுமா?

காஷ்மீர் மாநிலத்தில் ஆசிபாவுக்கு நடந்த கொடுமையால் இந்தியாவே அதிர்ச்சியில் உள்ளது அதைவிட இந்த கொடூர குற்றவாளிகளுக்கு ஒருசிலர் ஆதரவாக பேசி வருவது அதிர்ச்சியாகவும் அசிங்கமாகவும் உள்ளது.

விக்ரம் என்ற துருவ நட்சத்திரத்திற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

நடிகர், நடிகைகளை நட்சத்திரம் என்று அழைத்தால் அபூர்வமான பிறவி நடிகர்களை துருவ நட்சத்திரம் என்று அழைக்கலாம்.

ரஜினி-கமல் அரசியல்: சிம்புவின் ஆதரவு யாருக்கு?

உலக நாயகன் கமல்ஹாசன் தனி அரசியல் கட்சி ஆரம்பித்து களத்தில் குதித்துவிட்டார். சூப்பர் ஸ்டார் ரஜினியின் கட்சி குறித்த அறிவிப்பு எந்த நேரத்திலும் வெளிவர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

ஆர்யா திருமணம் செய்து கொள்ள போகும் அந்த பெண்

ஆர்யா நடத்தி வரும் 'எங்க வீட்டு மாப்பிள்ளை' என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இளம்பெண்களில் ஒருவரை ஆர்யா தனது மனைவியாக தேர்வு செய்யவுள்ளார்

இணையத்தை கலக்கும் சச்சினின் நள்ளிரவு வீடியோ

இந்தியாவின் கிரிக்கெட் கடவுள் சச்சினின் நள்ளிரவு வீடியோ ஒன்று கடந்த சில மணி நேரங்களாக இணையத்தை கலக்கி வருகிறது.