நிர்பயா பாலியல் குற்றவாளிகளுக்கு நாளை தூக்குத் தண்டனை உறுதி!!! நீதிமன்றம் உத்தரவு
Send us your feedback to audioarticles@vaarta.com
டெல்லியில் மருத்துவ கல்லூரி மாணவி நிர்பயா பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப் பட்ட 4 பேருக்கும் தூக்குத் தண்டனை விதித்து உத்தரவிட்டது டெல்லி பாட்டியாலா நீதிமன்றம். அதன்படி தூக்குத் தண்டனை நிறைவேற்றுவதற்கான பிடிவாரண்ட் 3 முறை பிறப்பிக்கப் பட்டது. ஆனால் அவர்களது தண்டனை நிறைவேற்றப் பட வில்லை என்பதும் குறிப்பிடத் தக்கது. ஜனவரி 22, பிப்ரவரி 1, மார்ச் 3 என மூன்று முறையும் பிடிவாரண்ட் பிறப்பிக்கப் பட்டு தண்டனை நிறைவேற்ற முடியாத சூழல் உருவானது.
தங்களுக்கு விதிக்கப் பட்ட தண்டனையை நிறைவேற்ற விடாமல் கைதிகள் ஒவ்வொருவராக கருணை மனுக்கைகளை காரணம் காட்டி மனுக் கொடுத்தனர். நேற்று ஒரு குற்றவாளியின் மனைவி தனக்கு விவாகரத்து வேண்டும் என்றும் கோரியிருந்தார். இந்நிலையில் நாளை தண்டனையைத் தள்ளி வைப்பதற்கு எந்தச் சட்டக் காரணமும் இல்லை தண்டனை நிறைவேற்றலாம் என டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
கடந்த 2012 இல் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி நிர்பயா, பாலியல் வன்கொடுமை செய்யப் பட்டார். பின்பு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அந்த வழக்கில் 6 பேர் கைது செய்யப் பட்டனர். ஒருவர் சிறுவர் என்பதால் சீர்திருத்தப் பள்ளியில் தண்டனை பெற்று வீட்டுக்கு அனுப்பப் பட்டார். இன்னொருவர் சிறையில் இருக்கும்போதே தற்கொலை செய்து கொண்டார் என்பதும் குறிப்பிடத் தக்கது.
அக்சய் தாகூர், வினய் சர்மா, முகேஷ் குமார் சிங், பவன் குப்தா ஆகிய நான்கு பேரும் முதலில் கருணை மனுக்களை டெல்லி ஆளுநர் மற்றும் ஜனாதிபதியிடம் அளித்து இருந்தனர். இவர்களது அனைத்து கருணை மனுக்களும் நிராகரிக்கப் பட்டது. மேலும், தண்டனையை குறைக்க கோரிய மனுக்களும் தள்ளுபடி செய்யப் பட்டன என்பதும் குறிப்பிடத் தக்கது. இந்நிலையில் எந்தச் சட்டச் சிக்கலும் இல்லததால் நாளை தண்டனை நிறைவேற்றப் படும் எனவும் எதிர்ப்பார்க்கப் படுகிறது.
தண்டனையை நிறைவேற்றுவதற்கான முன்னேற்பாடுகளை திகார் சிறை துறை நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது என்பதும் குறிப்பிடத் தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout