மார்ச் 3 ஆம் தேதி நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை உறுதி – டெல்லி நீதிமன்றம் உத்தரவு
Send us your feedback to audioarticles@vaarta.com
டெல்லியில் 2012 ஆம் ஆண்டு ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப் பட்டு, கொலை செய்யப் பட்டார். அந்த வழக்கில் 4 பேருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப் பட்டது.
தண்டனை விதிக்கப் பட்டு நீண்ட நாட்களாக நிறைவேற்றப் படாததல் பல தரப்புகளில் இருந்து குற்றச் சாட்டுகள் எழுந்தன. நிர்பயாவின் அம்மா இது குறித்து மனு ஒன்றையும் தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் ஜனவரி 22 ஆம் தேதி தூக்குத் தண்டனை நிறைவேற்றப் படும் என்று டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்திரவிட்டது. ஆனால் தனது கருணை மனு நிலுவையில் இருப்பதாகக் கூறி தண்டனையை நிறைவேற்றக் கூடாது என முகேஷ் குமார் சிங் நீதிமன்றத்தை நாடினார். அதனைத் தொடர்ந்து தண்டனை பிப்ரவரி 1 ஆம் தேதிக்கு மாற்றப் பட்டது. முகேஷ் குமார் சிங்கின் கருணை மனுவும் தள்ளுபடி செய்யப் பட்டது குறிப்பிடத் தக்கது.
பிப்ரவரி 1 ஆம் தேதி தண்டனை நிறைவேற்றப் படும் என எதிர்ப் பார்க்கப் பட்ட நிலையில் குற்றவாளிகளில் இன்னொருவரான வினய் சர்மா தனது கருணை மனு நிலுவையில் இருப்பதாக மீண்டும் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். இந்நிலையில் தூக்குத் தண்டனை நிறைவேற்றுவது கேள்விக்குறியானது. பின்பு வினய் சர்மாவின் கருணை மனுவும் தள்ளுபடி செய்யப் பட்டது. தனது தண்டனைக் காலத்தை குறித்து எவ்வித கருணையும் காட்டப் படவில்லை என வினய் சர்மா மீண்டும் நீதிமன்றத்தை நாடினார். வழக்கு விசாரணையில் கருணை அளிக்கப் படுவது குறித்து எவ்விதக் கருத்தும் தெரிவிக்க படவில்லை.
இந்நிலையில், இன்று டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் 4 குற்றவாளிகளுக்கும் வரும் 3 ஆம் தேதி தூக்குத் தண்டனை நிறைவேற்ற வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. எனவே அக்சய் தாகூர், பவன் குப்தா, முகேஷ் குமார் சிங், வினய் சர்மா ஆகிய நால்வருக்கும் வருகின்ற 3 ஆம் தேதி தூக்குத் தண்டனை நிறைவேற்றப் படும் என எதிர்ப் பார்க்கப் படுகிறது.
நிர்பயா பாலியல் வன்கொடுமையில் மொத்தம் 6 பேர் தொடர்பு கொண்டிருந்தனர். அதில் ஒருவர் சிறையில் இருக்கும்போது தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். மற்றொருவர் 14 வயதுக்குட்பட்டவர் என்பதால் சிறுவர் சிறையில் அடைக்கப் பட்டு பின்பு விடுதலை செய்யப் பட்டார்.
இத்தீர்ப்பு குறித்து நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி, “நான் பெரிதாக மகிழ்ச்சி அடையவில்லை. குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை என்று மூன்றாவது முறையாக அறிவிக்கப் பட்டுள்ளது. நாங்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளோம். இறுதியாகத் தூக்குத் தண்டனை அளிக்கப் படும் என்ற தீர்ப்பு நிம்மதியை அளிக்கிறது. 3 ஆம் தேதி தூக்குத் தண்டனை நிறைவேற்றப் படும் என்று நம்புகிறோம்” எனக் கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout