விதவையாக விருப்பமில்லை, விவாகரத்து வேண்டும்: நிர்பயா குற்றவாளி மனைவி திடீர் மனு தாக்கல்
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த 2012ஆம் ஆண்டு டெல்லி மருத்துவக் கல்லூரி மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேருக்கு தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது. மார்ச் 20ஆம் தேதி 4 பேருக்கும் தூக்கு தண்டனையை நிறைவேற்ற அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளது. தூக்கு தண்டனையை தள்ளிப் போடுவதற்காக நான்கு குற்றவாளிகளும் மாறி மாறி பல்வேறு மனுக்களை தாக்கல் செய்தனர் என்பதும் அவர்கள் தாக்கல் செய்த அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டதால் மார்ச் 20 ஆம் தேதி தூக்கு தண்டனை உறுதி என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் திடீர் திருப்பமாக குற்றவாளிகளில் ஒருவரான அக்ஷய் குமாரின் மனைவி, ‘மார்ச் 20ஆம் தேதி தனது கணவர் தூக்கிலிடப்பட்டால் தான் விதவையாகிவிடுவேன் என்றும் தனக்கு விதவையாக விருப்பமில்லை என்றும் எனவே தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்கு முன்னால் அவரிடம் இருந்து எனக்கு விவாகரத்து வேண்டும் என்றும் மனு ஒன்று தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவால் தற்போது பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தூக்கு தண்டனையை நிறைவேற்ற இன்னும் 2 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் இந்த மனு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டால் விவாகரத்து வழக்கு முடியும் வரை அக்ஷய்குமார் தூக்கில் போட முடியாத நிலை ஏற்படலாம் என்று கருதப்படுகிறது. இதனால் திட்டமிட்டபடி மார்ச் 20ஆம் தேதி குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக சட்ட வல்லுனர்கள் கருத்து கூறி வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments