இந்தியாவில் இதுதான் முதல்முறை: சிவகார்த்திகேயன் படம் குறித்த புதிய தகவல்
Send us your feedback to audioarticles@vaarta.com
சிவகார்த்திகேயன் நடிப்பில் பொன்ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'சீமராஜா' திரைப்படம் வரும் விநாயகர் சதூர்த்தி தினத்தில் வெளியாகவுள்ள நிலையில் அவர் 'இன்று நேற்று நாளை' இயக்குனர் ரவிகுமாரின் இயக்கத்தில் தற்போது பெயரிடப்பாத ஒரு படத்தில் நடித்து வருகிறார். விஞ்ஞான சம்பந்தப்பட்ட திரைக்கதை கொண்ட இந்த படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார். 24ஏம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்த படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்யவுள்ளார்.
இந்த நிலையில் இந்த படத்தின் அரிய தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. இந்த படத்தில் ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா, அலெக்ஸா LF என்ற அதிநவீன கேமிராவை பயன்படுத்தவுள்ளார். இந்திய திரைப்படங்களில் இந்த கேமிராவை பயன்படுத்துவது இதுதான் முதல்முறை ஆகும். இந்த தகவலை 24ஏம் ஸ்டுடியோ நிறுவனம் தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளது. இதனால் இந்த படத்தில் விஞ்ஞான சம்பந்தப்பட்ட காட்சிகள் தத்ரூபமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக முதல்முறையாக ரகுல் ப்ரித்திசிங் நடிக்கும் இந்த படத்தில் கருணாகரன், யோகிபாபு,, கலக்க போவது யாரு' புகழ் கோதண்டம் உள்பட பலர் நடிக்கவுள்ளனர்.
#SK14Titbit : First time in India our dop #Niravshah introducing #AlexaLF camera for our dream project @Siva_Kartikeyan in @Ravikumar_Dir ‘s directorial @arrahman ‘s Musical@muthurajthanga1 as Production designer #SciFi #SK14https://t.co/MYPyiUCbYZ pic.twitter.com/NWN9dTxO9D
— 24AM STUDIOS® (@24AMSTUDIOS) July 3, 2018
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout