டெனட் படத்தில் 'வலிமை' டெக்னீஷியன்: அஜித் ரசிகர்கள் வாழ்த்து!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல ஹாலிவுட் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய ’டெனட்’ திரைப்படம் கடந்த 4ஆம் தேதி இந்தியாவில் வெளியானது என்பதும், இந்தப் படம் தமிழ் உள்பட அனைத்து இந்திய மொழிகளிலும் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் இந்த படத்தின் இறுதியில் காண்பிக்கப்படும் டைட்டில் கார்டில் தமிழ் உள்பட பல இந்திய திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த நிராவ் ஷா அவர்களின் பெயர் இடம்பெற்றுள்ளது.
‘டெனட்’ திரைப்படத்தின் ஒருசில காட்சிகள் இந்தியாவில் படமாக்கப்பட்டபோது அந்த காட்சிகளுக்கு ஒளிப்பதிவாளராக நிராவ் ஷா பணிபுரிந்தார். இதனை அடுத்து அவரது பெயர் டைட்டில் கார்டில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை கவனித்த ரசிகர்கள் நிராவ் ஷாவுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். தற்போது நிராவ் ஷா அஜித்தின் ‘வலிமை’ படத்தின் ஒளிப்பதிவாளராக பணி புரிந்து வருவதை அடுத்து அவருக்கு அஜித் ரசிகர்களும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் தெரிவித்து வருகின்றனர்
மேலும் நிராவ் ஷா தற்போது சிவகார்த்திகேயனின் ‘அயலான், விஷாலின் ’துப்பறிவாளன் 2’ ஆகிய படங்களுக்கும் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments