'எஸ்கே 16' படத்தில் இணைந்த மேலும் மூன்று பிரபலங்கள்
Send us your feedback to audioarticles@vaarta.com
சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள 'எஸ்கே 16' படத்தின் அப்டேட்டுக்கள் இடைவெளியின்றி வெளிவந்து அவரது ரசிகர்களை திக்குமுக்காட செய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். ஒவ்வொரு சில மணி நேரத்திற்கு ஒரு முறையும் இந்த படத்தில் புதிது புதிதாக பிரபலங்கள் இணைந்து வருகின்றனர்.
அந்த வகையில் சற்றுமுன் இந்த படத்தில் இணைந்த மூன்று பிரபலங்கள் குறித்த தகவல் வெளிவந்துள்ளது. 'எஸ்கே 16' படத்தின் ஒளிப்பதிவாளராக நீரவ் ஷா அவர்களும் படத்தொகுப்பாளராக அந்தோணியும் தற்போது இணைந்துள்ளனர். மேலும் இந்த படத்தின் கலை இயக்குனராக வீரமசர் என்பவர் இணைந்துள்ளார்.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கும் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் அனு இமானுவேல், ஐஸ்வர்யா ராஜேஷ், யோகிபாபு, சூரி, நட்டி நட்ராஜ், ஆர்.கே.சுரேஷ், பாரதிராஜா, சமுத்திரக்கனி ஆகியோர் நடிக்கவுள்ளனர் என்பதும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கவுள்ளார் என்பதும் தெரிந்ததே.
The super talented crew of #SK16BySunPictures :
— Sun Pictures (@sunpictures) May 7, 2019
Cinematographer - @nirav_dop
Editor - @AntonyLRuben
Art director - @Veerasamar@Siva_Kartikeyan @Pandiraj_dir @Immancomposer pic.twitter.com/sQsJ3vkS0Y
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments