தமிழகத்திற்கும் பரவிவிட்டதா நிபா வைரஸ்? மருத்துவர்கள் விளக்கம்

  • IndiaGlitz, [Monday,May 28 2018]

கேரளாவில் கடந்த சில நாட்களாக பரவி வரும் நிபா வைரஸ் தாக்குதலால் பலர் உயிரிழந்து வருகின்றனர். வெளவால்கள் மூலம் பரவி வரும் இந்த கொடுமையான நோய், கேரளா மட்டுமின்றி தமிழகத்திலும் பரவிவிட்டதாக அச்சம் தரும் செய்திகள் பரவி வருகிறாது.

இந்த நிலையில் தமிழகத்தில் இதுவரை யாருக்கும் நிபா வைரஸ் பாதிப்பு இல்லை என்றும் அதனால் பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம் என்றும் மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் திருச்சியில் நிபா வைரஸ் ஒருசிலரை தாக்கியதாக செய்திகள் வெளிவந்தது. ஆனால் இந்த செய்திகள் உண்மையில்லை என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்த வைரஸ் தாக்குதலில் இருந்து தப்பிக்க பழங்களை சுடுநீரில் கழுவி சாப்பிட வேண்டும் என்றும் பறவைகள் கடித்த பழங்களை சாப்பிடக்கூடாது என்றும் சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. மேலும் கேரளாவுக்கு வேலைநிமித்தம் சென்று தமிழகம் திரும்புபவர்களை தமிழக சுகாதாரத்துறை தீவிரமாக சோதனை செய்து வருவதாகவும் தெரிய வந்துள்ளது.

இந்த நோயை குணப்படுத்தவோ அல்லது தடுக்கவோ இதுவரை மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதால் உயிரிழப்பு அதிகமாகி வருகிறது. கேரளாவில் இதுவரை இந்த வைரஸ் தாக்குதலால் நர்ஸ் உள்பட 14 பேர் மரணம் அடைந்துள்ளனர். எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சாதாரண நோய் என்று அட்மிட் ஆகும் நோயாளிகளுக்கும் நிபா வைரஸ் தாக்குதல் இருக்கின்றதா? என்ற சோதனையை நடத்த கேரள சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.