நீர்மின் நிலையத்தில் ஏற்பட்ட பயங்கரத் தீ… உள்ளே மாட்டிக்கொண்ட 9 தொழிலாளர்கள்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
தெலுங்கானா மாநிலம் ஸ்ரீசைலத்தில் உள்ள நீர்மின் நிலையத்தில் நேற்று இரவு பயங்கர தீவித்து ஏற்பட்டதாகப் பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த விபத்தினால் காயமடைந்த 6 பேர் படுகாயங்களுடன் மருத்துவ மனைகளில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் தீ விபத்து ஏற்பட்ட பகுதிக்குள் 9 தொழிலாளர்கள் மாட்டிக் கொண்டதால் அப்பகுதியில் பரபரப்பு அதிகமாகி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஸ்ரீசைலத்தில் உள்ள நீர் மின்நிலையத்தில் திடீரென்று ஏற்பட்ட தீ விபத்தினால் யூனிட் 1 முழுவதும் தீக்கிரையாகியதாகக் கூறப்படுகிறது. அங்கிருந்த 10 தொழிலாளர்கள் மட்டுமே வெளியே வரமுடிந்ததாகவும் மற்றவர்கள் வெளியே வரமுடியாமம் கடும் பதற்றம் ஏற்பட்டதகாவும் அம்மாநில அமைச்சர் ஜி.ஜகதீஷ்வர் தெரிவித்து இருக்கிறார். இதனால் நிலைமையை சமாளிக்க சிங்காநேரி நிலச்சரிச் சுரங்கத்தின் ஊழியர்கள் உடனடியாக வரவழைக்கப் பட்டு நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர முயற்சிகள் எடுக்கப்பட்டதாகவும் அமைச்சர் தகவல் தெரிவித்து உள்ளனர்.
தீயணைப்புப் படைவீரர்கள் மற்றும் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் அப்பகுதியில் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது. இதுவரை ஏற்பட்ட பாதிப்புகள், மீட்கப்பட்ட தொழிலாளர்கள் மற்றும் கள நிலவரம் குறித்த விவரங்கள் எதுவும் வெளியாக வில்லை. நீர்மின் நிலையத்தில் ஏற்பட்ட தீவிபத்தால் அப்பகுதி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருப்பதகாவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout