ஒரே டிக்கெட்டை கேன்சல் செய்த ஒன்பது பேர்...! தீபிகாவின் சபாக் படத்தை "மெர்சல்" ட்ரெண்ட் செய்யும் பாஜக.
Send us your feedback to audioarticles@vaarta.com
தீபிகா படுகோன் தயாரித்து நடித்துள்ள சபாக் திரைப்படமானது நாளை மறுநாள் 10ம் தேதி வெளியாகப் போகின்றது. ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட லட்சுமி அகர்வாலின் வாழ்கை வரலாற்றை மையமாக கொண்டு உருவாகியுள்ள படம் தான் சபாக்.
இந்நிலையில் ஜேஎன்யூ மாணவர்கள் கடந்த சனிக்கிழமை இரவு அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டனர். இதில் ஜேஎன்யூ மாணவர் அமைப்பின் தலைவர் உள்பட பலர் பலத்த காயம் அடைந்தனர். ஆனாலும், அடுத்த நாளே மீண்டும் போராட்ட களத்தில் மாணவர்கள் குதித்து விட்டனர். இவர்களுக்கு ஆதரவாக பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப், டாப்ஸி பானு உள்ளிட்டவர்கள் போராட்டத்தில் களமிறங்கியிருந்த போது நேற்று நடிகை தீபிகா படுகோனும் நேரில் சென்று ஆதரவளித்தார்.
தீபிகா போராட்ட களத்திற்கு வந்த செய்தி பரவிய சிறிது நேரத்திற்குள் ட்விட்டரில் #boycottchhapaak என்ற ஹேஷ்டேக் டிரெண்டானது. பாஜக ஆதரவாளர்கள் தான் இந்த டிரெண்டிங்கை செய்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் எல்லோரும் ஒரே டிக்கெட்டை போட்டு தான் அதை கேன்சல் செய்து விட்டதாகவும், படத்திற்கு போகமாட்டேன் எனவும் பதிவிட்டு அவர்களுக்குளேயே அதை பாராட்டியும் வருகின்றனர்.
எப்படி ஒரே இருக்கையில் எல்லோரும் உட்காருவார்கள் என நெட்டிசன்கள் பாஜக ஐ.டி விங்கை கிண்டலடித்து வருகின்றனர். இப்படித்தான் சென்ற வருடம் பத்மாவதி படத்திற்கு பதிலாக பாகமதி படம், பிறகு சர்ஃப் எக்ஸெலை தடை செய்ய வேண்டும் என எம்.எஸ் எக்சல் பக்கத்திற்கு சென்று கமெண்ட் செய்வது போன்ற வேலைகளை செய்து கொண்டிருந்தார்கள்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments